உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது உலர் திராட்சை,நீரில் உறவைத்து சாப்பிடுங்க,நோய்களிலிருந்து விடுபடுங்க
வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உலர் திராட்சையில் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.
உலர் பழங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது திராட்சை தான். சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை பயன்படுத்தப்பட்டது. தற்போது உலர் திராட்சைகள் விரைவான ஆற்றலை அதிகரிக்க ஸ்மூத்திஸ், ஓட்ஸ் அல்லது யோகர்ட்டில் சேர்க்கப்படுகின்றன. உடலில் ஏற்படும் சில லேசான அடிப்படை பிரச்சனைகளை உணவின் மூலமே எப்போதும் சரி செய்ய வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளை விட உணவு எப்போதுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. நம்முடைய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு நாம் எப்போதாவது சாப்பிடும் பழங்களில் அதிகம் இருக்கும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உலர்ந்த பழங்கள் நம்மை சுற்றி இருந்தாலும் கூட அவற்றை சாப்பிடுவதில் நாம் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. உலர்திராட்சை என்று சொன்னவுடன் முதலில் நம் அனைவருக்கும் நியாபகம் வருவது “பாயசம், பொங்கல் கேசரி, இனிப்பு பண்டங்களில் உலர்திராட்சை என்பது உலர்ந்த வகை திராட்சைச் சேர்ந்ததாகும். இந்த உலர்ந்ததிராட்சை பச்சையாகவோ , அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இவை உலகின் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.உலர்திராட்சை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட கூடாது, தினமும் அதிகளவு 3 அல்லது 5 உலர்திராட்சை சாப்பிடலாம். உடலுக்கு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அளவாக சாப்பிடவேண்டு , இல்லயென்றால் அதுவே நஞ்சாகிவிடும்.திராட்சைப் பழங்களிலேயே "உயர்தரமான திராட்சையை" பதம் பிரித்து உலர்த்தி தயாரிக்கப்படுவது தான் உலர்திராட்சை ஆகும். கருப்பு உலர்திராட்சை, தங்கநிற உலர்திராட்சை , என உலர்திராட்சை இரண்டு வகை உள்ளது. ( திராட்சை வத்தல் எனவும் அழைக்கப்படுகிறது) பெரும்பாலும் உலர்திராட்சைகள் விதைகள் இல்லாத திராட்சைகளை மட்டும் பயன்படுத்திக்கின்றனர்.
உலர்திராட்சை நன்மைகள்:
உலர்திராட்சையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்று பிரச்சனையும் இருந்து விடுபடலாம். இந்த உலர்திராட்சை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
உலர்திராட்சை வெகுநாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீரில் போட்டவுடன் பெரிதாக விரிவடையும்.உலர்திராட்சையின் மருத்துவ குணங்கள்:
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் பிரச்சனைகளுக்கு உலர்திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதவிடாய் களங்களில் வயிறுவலி , மார்புவலி , இடுப்புவலி , கால்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இவை இயற்க்கை மருந்தாக இருக்கிறது. பெண்கள் தினமும் உலர்திராட்சை சாப்பிட்டு வந்தால் நல்லது.
மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் உலை திராட்சைகளை வெந்நீரில் போட்டு குடிக்கலாம். உடம்பில் இரும்பு சத்து அதிகரிக்கும்.குடல் புண் , வாய்ப்புண், வயிற்று வலி, உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கும் உலர்திராட்சை குணப்படுத்தும்.
ரத்தம் ஊறுவதற்கு, ரத்தம் சுத்தப்படுத்தவும் அதிக நன்மை கொண்டது, எலும்புகள் நன்றாக உறுதியாக இருப்பதற்கும் , பற்கள் உறுதிக்கும் உலர்திராட்சி மிகவும் பயனுள்ளது.ஊட்டச்சத்துக்கள்: சந்தையில் பல்வேறு வகையான உலர் திராட்சை வகைகள் கிடைக்கின்றன. பொதுவாக இவை குறைந்த அளவே ப்ராசஸ் செய்யப்படுவதால் பதப்படுத்த பிரசர்வேட்டிவ் உள்ளிட்டவை சேர்க்கப்படுவது இல்லை. 40 கிராம் அல்லது ஒரு கையளவு உலர் திராட்சையில் கலோரிகள்: 108, புரோட்டின்- 1கிராம், கார்போஹைட்ரேட்ஸ்: 29 கிராம், ஃபைபர் : 1 கிராம், சுகர்- 21 கிராம் உள்ளிட்டவை அடக்கம். தவிர உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன. மேலும் இது பூஜ்ஜிய சதவிகித கொழுப்பு (zero percent fat) கொண்டது. உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.