Onetamil News Logo

தூத்துக்குடியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால்  விநியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும் 

 
Onetamil News
Onetamil News
 
 

தூத்துக்குடியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால்  விநியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும் 



தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன.  2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி தூத்துக்குடி மாநகர மக்கள்தொகை 3,72,408 ஆகும்.   தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 50 வார்டுகளுக்கு தாமிரபரணி ஆற்றில் உள்ள வல்லநாடு படுகையிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மாநகராட்சியோடு இணைந்துள்ள அத்திமரப்பட்டி, தூத்துக்குடி ஊரகம், சங்கரப்பேரி, மீளவிட்டான் மற்றும் முத்தையாபுரம் ஆகிய முன்னாள் கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  
தாமிரபரணி ஆற்றில் நீர் பாபநாசம் அணையிலிருந்து விடுவிக்கப்படுகிறது.  கடந்த 09.01.2017 வரை பாபநாசம் அணையிலிருந்து 104 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.  இதனால், வல்லநாடு குடிநீர் ஆதாரம் பகுதிக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது.  இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் நடந்த  கூட்டத்தில் உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான குடிநீர் திறந்துவிடத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது 200 கன அடி பாபநாசம் அணையிலிருந்து பொதுப்பணித் துறையால் திறந்து விடப்பட்டுள்ளது. 
 பாபநாசம் அணையில் நீர் இருப்பு  தற்போது 28.40 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 36.81 அடியாகவும் உள்ளது.
தற்போது  தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், பெருமளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 2017 வரை தாமிரபரணி ஆற்று நீரைப் பயன்படுத்தி தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்க இயலும்.  அதனைத் தொடர்ந்து, கோடை காலத்தில் குடிநீர் தேவையினை சமாளித்திட தனியார் கிணறு  மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ளது.  அதனை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் போதிய அளவிற்கு சின்டெக்ஸ் தொட்டிகள் வைத்து லாரி தண்ணீரைக் கொண்டு நிரப்பி குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 போதிய எண்ணிக்கையில் கூடுதலாக நிலத்தடி நீராதாரங்களைக் கண்டறிந்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  மாநகரில் உள்ள 8 மேல்நிலைத் தொட்டிகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்கள் குடிநீர் எடுத்து செல்வதற்கு ஏதுவாக பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இதனைப் பயன்படுத்தி குடிநீர் எடுத்துக்கொள்ளலாம். 
 குடிநீர் பற்றாக்குறை நிலவும் இந்த நெருக்கடியான காலத்தில், விநியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திட மாநகரப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo