Onetamil News Logo

துபாயில் கொரோனா ஊரடங்கு ;கடந்த 5 மாத காலம் வேலை மற்றும் சம்பளமின்மை ;தொழிலார்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..

Onetamil News
 

துபாயில் கொரோனா ஊரடங்கு ;கடந்த 5 மாத காலம் வேலை மற்றும் சம்பளமின்மை ;தொழிலார்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..


துபாய்  2020 ஜூன் 6 ;துபாயில் கடந்த 5 மாத காலம் வேலை மற்றும் சம்பளமின்மை காரணமாக  தமிழ்நாட்டை சேர்ந்த 15 தமிழ் தொழிலாளர்கள் தங்குமிடம் மற்றும் உணவுக்கு தவிக்கும்  சூழல் உருவானது. இந்த இக்கட்டான சூழ்நிலையை அவர்கள் முகநூல் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக கடந்த மே மாதம் 26ம் தேதி நியூஸ் 7 தொலைக்காட்சி இதை வெளியிட்டது. 
இந்த செய்தியை முதன் முதலாக ரஜினி மக்கள் மன்ற காவலர் பிரசாத் ( ரஜினி மக்கள் மன்றம் - அபுதாபி ) ரஜினி மக்கள் மன்றத்தின் கவனத்திற்கு ஜூன் மாதம் 2ம் தேதி கொண்டு  வந்தார்..  மறுபுறம் சம்பந்தப்பட்ட தமிழர்களை தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்டு அவர்களது தற்போதைய நிலை மற்றும் அவர்களுக்கு இதுவரை உதவிய உதவ முன் வந்தவர்களின் உதவி பற்றி கேட்டறிந்தார்.. இதன் தொடர்ச்சியாக பிரசாத்தோடு தொடர்பிலிருந்த துபாய் மன்றத்தின் துணை செயலாளர் சக்தி .இதற்கான முதல் முன்னெடுப்பாக துபாய் மற்றும் ஷார்ஜா மன்றத்தின் மற்ற உறுப்பினர்களை  தொடர்பு கொண்டு அவர்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்யலாம் என்ற ஆலோசனையை முன்னெடுத்தார்.. 
இந்த ஆலோசனையில் பிரசாத், சக்திகுமார்,  லெனின், கிஷோர், ஜெய்கணேஷ் மற்றும் ராமசந்திரன் பங்கு கொண்டனர்.. சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு  இருப்பிடம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டதால்.. குறைந்தது ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை கொடுத்து உதவலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. ஆலோசனையில் பங்கு பெற்ற அனைத்து காவலர்களும் அதற்கான பணப்பங்களிப்பை உடனடியாக உறுதி செய்தனர்..  15 நபர்களுக்கு தேவைப்படும்  மளிகை மற்றும் காய்கறிகளுக்கான பட்டியலை கிஷோர் மற்றும் லெனின் உடனடியாக  தயாரித்து மறுநாளே அவற்றை  கொள்முதல் செய்தனர்.ஜூன் 5ம் தேதி மதியம் 3 மணி அளவில் சம்பந்தப்பட்ட தொழிலார்களை நேரில் சந்தித்து மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.. இந்த உதவியின் போது ரஜினி மக்கள் மன்றம் ஷார்ஜா வர்த்தக அணியின் செயலாளர் பா.லெனின், இணை செயலாளர் கிஷோர் - , மற்றும் துபாய் மன்றத்தின்  செயலாளர் சே.ராமசந்திரன் , இணை செயலாளர் சக்திகுமார்  , துணை செயலாளர் L. ஜெய்கணேஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo