மழை மற்றும் முன்னறிவிப்பு காரணமாக, இன்று மட்டும் அனைத்து பள்ளிகளும் மூடப்படும். - தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
மழை மற்றும் முன்னறிவிப்பு காரணமாக, இன்று மட்டும் அனைத்து பள்ளிகளும் மூடப்படும்.
- தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி 2022 நவம்பர் 29;தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்கிழமை) முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் முன்னறிவிப்பு காரணமாக, இன்று மட்டும் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று
தூத்துக்குடி கலெக்டர் அறிவித்துள்ளார்.