Onetamil News Logo

 துரை வைகோ தேர்வு, கோவில்பட்டியில் மதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் 

Onetamil News
 

 துரை வைகோ தேர்வு, கோவில்பட்டியில் மதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் 


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20; மறுமலர்ச்சி திமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு கோவில்பட்டியில் மதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என மதிமுகவினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில்  பெரும்பான்மை ஆதரவு இருந்த காரணத்தினால் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு  தலைமை கழகச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்பட்டி மதிமுக நகர கழக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு  மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ்  தலைமையில் மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  கோவில்பட்டி மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன்,மாவட்ட துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன், நகர துணைச் செயலாளர் வனராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்.எஸ். கணேசன், மாநில கலைத் துறை துணைச் செயலாளர் பொன் ஸ்ரீ ராம், மாநில தீர்மான குழு உறுப்பினர் முத்துச்செல்வன், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,புதூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார்,மதிமுக நிர்வாகிகள் ராமசுப்பு, சிவராமகிருஷ்ணன்,லியோ செண்பகராஜ், நாகராஜ், வேலாயுதம், வெயிலு முத்து, முத்துராஜ், ராஜதுரை, ராஜேஷ்,உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo