அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் வியாபாரிகள் இரண்டு பேரை அடித்து கொன்றது தான் சாதனை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் நெடுங்குளத்தில் குற்றச்சாட்டு
தூத்துக்குடி திமுக மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்; சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் நெடுங்குளத்தில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டு சாதனைகளை எடுத்து கூறி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் பேசுகையில் திராவிட மாடல் ஆட்சி 2021ல் மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடுமையாக இருந்த காலக்கட்டம் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச முடியாமல் உறவினர் வீட்டுக்கு செல்லமுடியாமல் பரிதவித்த காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை தமிழக மக்களை பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது என்பதை உணர்ந்து இந்தியாவில் எந்த முதலமைச்சரும் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது கிடையாது ஆனால் நம்முடைய முதல்வர் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் நல்லமுறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். என்று உத்தரவிட்டு ஆக்ஜிசன் தட்டுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டு அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்கி தமிழக மக்களின் நலனை பாதுகாத்தார். பின்னர் இரண்டு கட்டமாக நான்காயிரம் வழங்கப்பட்டது. பால்விலை ரூ3 குறைவு, பெண்களுக்கு இலவசபேருந்து பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிப்பு உதவித்தொகைக்கு ஆயிரம் முதியோர் உதவி தொகை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க 30 ஆயிரம் கோடி ஓதுக்கீடு விவசாய கடன் நகைக்கடன் தள்ளுபடி, என்று சாதனை பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகளாக தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் அடைய வில்லை. தற்போது தொழில்வளர்ச்சி வேலைவாய்ப்பு என வழங்கப்பட்டு செயல்படாமல் இருந்த நலவாரியங்கள் அனைத்தும் முறையாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகின்றன. பத்திரிகையாளர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கப்படுவது மட்டுமின்றி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செலவிடப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு வியாபாரிகளை காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொன்றது தான் சாதனை இப்படிபட்ட வேதனையான அதிமுக ஆட்சி வரலாறுகள் நிறையவுள்ளது. என்று குற்றம் சாட்டி பேசினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர் பவானி கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ், சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோசப், நகரச் செயலாளர் இளங்கோ, மாவட்ட கல்வி துறை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், நகர இளைஞரணி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.