Onetamil News Logo

கறி விருந்தில் நன்கு  சாப்பிடணுமா?  சிறப்பான ஆலோசனைகள்     

Onetamil News
 

கறி விருந்தில் நன்கு  சாப்பிடணுமா?  சிறப்பான ஆலோசனைகள்     


கறிவிருந்துக்கு செல்லும் முதல்நாளே
 நம்மை தயார்படுத்தி கொள்ளவேன்டும்.
 
முதல் நாள் இரவு எளிதில் ஜீரனமாக கூடிய 
இட்லி தோசை உணவுகளை உண்பது நல்லது. இல்லையெனில் அஜீரன கோளாறு ஏற்பட்டு காரியம் கெட்டுபோகும்.
விருந்துக்கு போகும்போது டைட்டான ஜீன்ஸ் பேன்டுகள், டைட்டான சர்டுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். தொள தொளவென இருக்கும் பேன்டுகள் காற்றோட்டமான சட்டைகளே சிறப்பு. ஃபுல் கட்டு கட்டிவிடுட்டு வரும்போது 
லூசான சட்டைகள் முன்னோக்கி தள்ளிய தொப்பைகளை காட்டிகொடுக்காது ..
எந்த காரணத்தை கொண்டும் 
முதல் பந்தியை 
தவற விட்டு விடாதீர்கள்.
முதல் பந்தியில் மட்டுமே 
அத்தனை ஐயிட்டங்கலும் கிடைக்கும்.
பந்தியில் அமரும் போது வயதான பெரியவர்கள் அல்லது சிறுவர்கள் இடையே அமர்வது சிறப்பு .
ஏனென்றால் அவர்கள்தான் மென்று சாப்பிட அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இளைஞர்கள் சட்டென்று இடத்தை காலி செய்துவிடுவதால் தனியாக அமர்ந்து சாப்பிடும் சங்கடம் ஏற்படும்.
சப்ளையரை 
தல , பாஸ். ஜீ என்று கெத்தான வார்த்தைகளால் அழைப்பது கூடுதல் லாபம்.
பறிமாறும் போது 'போதும் போதும்' என்ற வார்தையை கனீர் என்றும், 'சாப்பிட்டுட்டு வாங்கிகிறேன்' என்பதை சைலன்டாகவும் சொல்லவேன்டும் .
'ஏம்பா தாத்தவுக்கு கொஞ்சம் கறி வை' என்று சத்தமாக அழைத்து விட்டு, அருகில் வந்தவுடன் 'அப்டியே இங்கயும் கொஞ்சம் கவனிங்க பாஸ்னு' சைலன்டாக சொல்லவேண்டும்.
கறி வைத்தவுடன் ஆவேசமாக 
லபக் லபக் என சாப்பிடகூடாது. திகட்ட கூடிய கொழுப்புகளையும், எலும்புகளையும் தனி தனியாக 
நின்னு நிதானமாக பிரித்து மேயவேண்டும்.
சாப்பிட்ட பிறகு
வெதுவெதுப்பான சுடுநீரை குடித்தால் எளிதில் உணவு செரிமானமாகும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo