Onetamil News Logo

தூத்துக்குடி துறைமுகம் அருகே சரக்குபெட்டக லாரி மீது மின்சாரம் தாக்கி விபத்து –லாரி டிரைவர் உடல் கருகி பலி 

Onetamil News
 

தூத்துக்குடி துறைமுகம் அருகே சரக்குபெட்டக லாரி மீது மின்சாரம் தாக்கி விபத்து –லாரி டிரைவர் உடல் கருகி பலி   


                                                                                                                                                                                 
    தூத்துக்குடி அக்டோபர் 12 ;  தூத்துக்குடி துறைமுகம் அருகே சரக்குபெட்டக லாரி மீது மின்சாரம் தாக்கி விபத்து –லாரி டிரைவர் உடல் கருகி பலி  
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குபெட்டகம் ஏற்றிவந்த லாரி மீது மின்கம்பி உரசியதால் லாரி தீப்பற்றி எரிந்தது இதில் லாரி டிரைவர் சம்பவ இடத்தில் உடல்கருகி பலியானார் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் லூர்த்துசாமி சரக்குபெட்டக லாரியில் சரக்குபெட்டகத்தை ஏற்றிகொண்டு துறைமுக புறவழிசாலையில் உள்ள தனியார் சரக்குபெட்டக குடோனுக்கு சென்றுஉள்ளனர். அப்போது தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகே வந்தபோது தனது லாரியை நிறுத்திவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் லாரியை நிறுத்தி இடத்தில் மேல் உயர்மின்கம்பி சென்றுள்ளது. இந்த மின்கம்பி லாரியின் மீது இருந்த சரக்குபெட்டகத்தின் மீது உரசிஉள்ளது இந்த நிலையில் டிரைவர் லூர்த்துசாமி கழிவறைக்கு சென்றுவிட்டு மீண்டும் லாரியில் ஈரக்காலுடன் ஏறி உள்ளார் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்து லாரியில் ஏறியவுடன் டிரைவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது இதில் டிரைவர் மீது தீப்பற்றி  எரிந்துள்ளது. இதைகண்டு அருகில் இருந்தவர்கள் காப்பற்ற முயற்சி செய்வதற்குள் டிரைவர் லூர்த்துசாமி முழுவதும் எரிந்து பலி ஆகியுள்ளார் இதைதொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புதுறையினார் தீயை அணைத்து பலியான லூர்த்துசாமி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனார் இந்த சம்பவம் பற்றி தகவல்அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார் இந்த விபத்து குறித்து  தென்பாகம் காவல்துறையினார் விசாரணை செய்துவருகிறார்கள்  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo