இம்மானுவேல் சேகரனின் 66 ஆம் ஆண்டு நினைவு தினம் ;அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை
தூத்துக்குடி 2023 செப் 11 ;இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது குருபூஜை விழாவான செப்டம்பர் 11ஆம் தேதியை தமிழக முதல்வர் அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தமிழக அரசு சார்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.ஆகையால் இந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.