Onetamil News Logo

தூத்துக்குடி பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அடாவடிமேனேஜர் மீதும் நடவடிக்கை எடுக்க  ஊழியர்கள் கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடி பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அடாவடிமேனேஜர் மீதும் நடவடிக்கை எடுக்க  ஊழியர்கள் கோரிக்கை   


சென்னை 2020 அக்டோபர் 28 ; தூத்துக்குடி பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அடாவடிமேனேஜர் மீதும் நடவடிக்கை எடுக்க  ஊழியர்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் WGC ரோட்டில், செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டரை வருடங்கள் பணி செய்து வந்த ஊழியர்கள் 20 பேரை அதிரடியாக அதன் மேலாளர் ராஜ்குமார் என்பவர் நீக்கியுள்ளார். மேலும் ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட வேண்டியும் பாதிக்கப்பட்ட 20 ஊழியர்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 
இது குறித்து ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறியதாவது.....
கொடிய நோயான கொரொனா நோய் பாதிப்பால் உலகமே பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்து உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் கடன்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என கூறியுள்ளது. ஆனால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் ராஜ்குமார் என்பவர் கடன் வாங்கிய நபர்களிடம் அராஜகம் செய்தாவது கடனை வசூல் செய்து வரவேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி வந்தார். நாங்கள் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்ய போகும்போது அனைவருமே வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூலை திரும்பப் பெற முடியாமல் வந்து  கூறினோம். ஆனால் அவர்களிடம் சண்டையிட்டாவது வாங்கி வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். நாங்கள் மறுக்கவே 20 பேரை பணி நீக்கம் செய்து விட்டார். 
இரண்டரை வருடங்கள் வேலை பார்த்து வந்த 20 ஊழியர்கள் நாங்கள் இப்பொழுது வேலையின்றி, வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கூறுகின்றனர். மேலும் மேனேஜர் ராஜ்குமார் ஜாதி பெயரை குறிப்பிட்டு தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் எனவே தங்களுக்கு வேலை மீண்டும் வழங்கிட வலியுறுத்தியும், ஜாதி ரீதியாக பேசும் மேனேஜர் ராஜ்குமார் மீது வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் மனு கொடுத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo