Onetamil News Logo

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

Onetamil News
 

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு


தூத்துக்குடி அக்டோபர் 11; தமிழ்நாடு அரசு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது.
இந்திய தொலைதொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணியிடங்களுக்கு 21 முதல் 50 வயதிற்குட்பட்டு தொலை தொடர்புத் துறை பணி அனுபவம் பெற்று எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்று ECNR பாஸ்போர்ட் வைத்துள்ள ஒன்பது கொத்தனார்கள் (மாத ஊதியம் ரூ.23,760/-) இரண்டு தச்சர்கள் (மாத ஊதியம் ரூ.23,760/-) மற்றும் தொலைதொடர்பு கேபிள் பொருத்துவதில் அனுபவம் பெற்ற 82 லேபர்கள் (மாத ஊதியம் ரூ.17280/-) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்ற குவைத் நாட்டின் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் (மாத ஊதியம் ரூ.28இ080) தேவைப்படுகிறார்கள். மேலும் விரிவான தகவல்களுக்கு www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்று வருட பணி ஒப்பந்த அடிப்படையில் விமான டிக்கெட், இலவச இருப்பிடம், இலவச மருத்துவம், மருத்துவக்காப்பீடு, மிகை நேர பணி ஊதியம் மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும். மேலும் 30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருத்தல் வேண்டும். 
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படத்தினை omctcil@gmail  ஈமெயில் வாயிலாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களை அறிய  044-22505886/22502267/ 22500417  என்ற தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம்.
இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண் RC No.B-0821/CHENNAI / CORPN/1000+/5/308/84 ஆகும் என்ற செய்தியினை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன்,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo