காமராஜ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
தூத்துக்குடி ஜனவரி 11 ; தூத்துக்குடி : காமராஜ் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழர்களின் கலாச்சார உடையான வேஷ்டி மற்றும் சேலைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் அணிந்து வந்திருந்தனர். கல்லூரியின் ஒவ்வொரு துறை சார்பிலும் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை பேராசிரியர் தேவராஜ் மற்றும் பேராசிரியர்கள் பலர் செய்திருந்தனர்.