Onetamil News Logo

ஏரல் வட்டம் அய்யனார் குளத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் புதிய மடை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று ஆய்வு 

Onetamil News
 

ஏரல் வட்டம் அய்யனார் குளத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் புதிய மடை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று ஆய்வு 


 தூத்துக்குடி  2019 செப் 9 ;தூத்துக்குடி மாவட்டம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் , திருவைகுண்டம் வட்டம், சிவகளை வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரல் வட்டம் அய்யனார் குளத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் புதிய மடை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குடிமராமத்து திட்டத்தின் கீழ், திருவைகுண்டம் வட்டம், சிவகளை வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரல் வட்டம் அய்யனார் குளத்தில் தூர்வாரும் பணிகள் மற்றும் புதிய மடை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  இன்று (9.9.2019)  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, , குடிமராமத்து திட்டத்தின் கீழ், திருவைகுண்டம் வட்டம், சிவகளை வரத்துக்கால்வாயில் ரூ.25 இலட்சம் மதிப்பில் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், தடுப்புச் சுவர் கட்டப்படும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஏரல் வட்டம் அய்யனார் குளத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகளையும், ரூ.4.3 இலட்சம் மதிப்பில் புதிய மடை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை வருகிற மழைகாலத்திற்கு முன்பாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், குளங்களை தூர்வார உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், மழை நீரை சேமிக்கும் வகையில் கரைகளை பலப்படுத்தி வரத்துக்கால்வாயை தூர்வாரவும் தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில், நமது மாவட்டத்தில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 37 குளங்களை ரூ.13.17 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், நமது மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்திலும், ஊருக்கு நூறு கை திட்டத்திலும் ஊரணிகள், குட்டைகள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சமூக பொறுப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் உத்தரவுபடி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் மூலம் இப்பணிகள் எந்தவொரு ஒளிவுமறைவின்றி தரமான முறையில் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகள் முடிந்த பின்பு அப்பகுதியில் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மேலும், வருகிற மழைகாலத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடித்திடும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். 

ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனபிரியா, ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி, திருவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர்கள் ரமேஷ்குமார், வினோத்குமார், அய்யனார்குளம் விவசாய பாசன சங்க செயலாளர் சேதுராமபிள்ளை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo