Onetamil News Logo

மனநிலை சரியில்லாத 47வயது பெண் பாலியல் வன்புனர் முயற்சி செய்து சம்படியில் கொலை. -  2 பேர் கைது ;போலீஸ் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை 

Onetamil News
 

மனநிலை சரியில்லாத 47வயது பெண் பாலியல் வன்புனர் முயற்சி செய்து சம்படியில் கொலை. -  2 பேர் கைது ;போலீஸ் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை 


தூத்துக்குடி 2020 செப் 14 ;தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி கிராமத்தைச் சேர்ந்த பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியை  சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி செங்கமலம் (47).இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.  இவர் தனது  ஆண் குழந்தையுடன் சம்படியில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். இந்நிலையில் இவர்  12.09.2020 காலை சம்படியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்துள்ளார்.  
இது குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சம்படி பகுதியை சேர்ந்த கணபதி மகன் ஆனந்த் (34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூக்காண்டி மகன் மகாராஜா என்ற சந்தன மகாராஜா (24) ஆகிய இருவரும் சேர்ந்து  செங்கமலத்தை தவறான நோக்கத்தோடு 10.09.2020 அன்று சற்று மனநிலை பாதிக்கப்பட்ட செங்கமலம் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, அவரை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கமலத்தை ஆனந்த் செங்கலால் தலை முகம் மற்றும் நெற்றியில் தாக்கியுள்ளார். மேலும் தங்களை காட்டி கொடுத்துவிடுவார் என இருவரும் பயந்து செங்கமலத்தை கொலை செய்து, அவரை தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள புதர் பகுதியில்  வீசி விட்டு சென்று விட்டனர். மேலும் இவர்கள் இருவரும் செங்கமலத்தை யாரும் தேடுகிறார்களா என்று பார்த்துள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் மகாராஜா அன்று இரவே சென்னை சென்றுள்ளார். ஆனந்த் சம்படியிலேயே இருந்துள்ளார். மீண்டும் மகாராஜா 12.09.2020 அன்று சென்னையிலிருந்து சம்படிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கொலை நடந்த செங்கமலத்தின் வீடு மற்றும் அவர் சடலமாக கிடந்த புதர் ஆகியவற்றில் கிடந்த சட்டைகள் மற்றும் சில பொருட்களை கொண்டு எதிரிகளை அடையாளம் கண்டு தனிப்படையினர் கைது செய்தனர்.
எதிரிகளை  விரைந்து கைது செய்த தனிப்படையினரை  தூத்துக்குடி மாவட்டட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo