Onetamil News Logo

குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடு, வன்முறையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ  ஆர்பாட்டம்.

Onetamil News
 

குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடு,வன்முறையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ  ஆர்பாட்டம்.


நெல்லை 2020 பிப்ரவரி 25 ;மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை  கண்டித்து  இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் ஷாகீன் பாக் பகுதில்  கடந்த இருண்டு மாதங்களாக பெண்கள் ஒன்று சேர்ந்து  தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் பாஜக முன்னாள் எம்.எல்.எ கபில் மிஸ்ரா தலைமையில் சில தினங்களுக்கு முன் பாஜக ஆதரவர்கள் திரண்டு   போராட்ட கார்களை நோக்கி பேரணி செல்ல முற்பட்டனர். போலீசார் சமாதானம் செய்து அனுப்பிய நிலையில். கபில் மிஸ்ரா வன்முறையை துண்டும் விதமாக பேசியும் டுவிட்டரில் எழுதியும்  வந்துள்ளார். இதனால் பாஜக ஆதரவாளர் பெருமளவில் திரண்டு  குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் .கற்களை கொண்டு எரிந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல வணிகநிறுவங்கள் வழிப்பாட்டு தளங்கள் தீக்கிரையக்க பட்டுள்ளதால். வட கிழக்கு டெல்லியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. இந்நிகழ்வை கண்டிதும் இரண்டு மாதங்கள் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்திவர்களை கைது செய்ய கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி இந்தியா முழுவதும் அங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில்
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில்  குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் , வன்முறையை  தூண்டிய பாஜகவை எதிர்த்தும் கண்டன கோஷங்கள் எழுப்பபட்டன. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு SDPI ஏர்வாடி நகர துணைத் தலைவர் LV பீர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.  எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்வர் முகைதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். நாங்குநேரி தொகுதி தலைவர் முகமது கனி அவர்களும் கண்டன உரையாற்றினார். நாங்குநேரி தொகுதி செயலாளர் சேக் கண்டன கோசங்கள் எழுப்பினார். ஏர்வாடி நகர பொருளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் நன்றி உரையாற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo