Onetamil News Logo

எட்டயாபுரம் காவல் நிலையம் அருகே ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது - 2 லாரிகள், ஜேசிபி இயந்திரம் மற்றும் கார் பறிமுதல்

Onetamil News
 

எட்டயாபுரம் காவல் நிலையம் அருகே ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது - 2 லாரிகள், ஜேசிபி இயந்திரம் மற்றும் கார் பறிமுதல்


தூத்துக்குடி  2020 செப் 18 ;தூத்துக்குடி மாவட்டம் ,எட்டயாபுரம் காவல் நிலையம் அருகே ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது - 2 லாரிகள், ஜேசிபி இயந்திரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது வடக்கு முத்தலாபுரம் ஆற்றுப்படுகையில் விருதுநகர் மாவட்டம், திருச்சூழியை சேர்ந்த போஸ் மகன் முத்துராமலிங்கம்(31), பால்ராஜ் மகன் கோவிந்தராஜ்(27), ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த கட்டபொம்மன் மகன் வேலவன்(27), விருதுநகர் மாவட்டம், நரிக்குடியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கணேசன்(27) ரெட்டியாபட்டியை சேர்ந்த பெத்தல்ராஜ் மகன் முத்துராஜ்(23), விருதுநகர் மாவட்டம் திருச்சூழியைச் சேர்ந்த முத்துக்காளை மகன் காளீஸ்வரன்(23), இருளாண்டி மகன் மணிகண்டன்(40), மூக்கையா மகன் பழனி(42), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் முத்துக்குமார்(23) ஆகிய 9 பேர் சட்டவிரோதமாக லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 6  யூனிட் மணல், 2 லாரிகள், ஜேசிபி இயந்திரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo