Onetamil News Logo

சைடு பிஸ்னஸ் செய்ய ஆசை கூறி ரூ 25 லட்சத்தை ஆசிரியரிடம் வாங்கி ஏப்பம் விட்டு அவரையே காரை ஏற்றி கொல்ல முயற்சி 2 பேர் கைது 

Onetamil News
 

சைடு பிஸ்னஸ் செய்ய ஆசை கூறி ரூ 25 லட்சத்தை ஆசிரியரிடம் வாங்கி ஏப்பம் விட்டு அவரையே காரை ஏற்றி கொல்ல முயற்சி 2 பேர் கைது 


எட்டயபுரம் 2020 மே 26 ;சைடு பிஸ்னஸ் செய்ய ஆசை கூறி ரூ 25 லட்சத்தை ஆசிரியரிடம் வாங்கி ஏப்பம் விட்டு அவரையே காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள பெரிய புளியம்பட்டி பகுதியைச்  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). இவர் பந்தல்குடி அருகே உள்ள சின்னதுமாக்குன்றில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம்,எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் ஆனந்தகிருஷ்ணன் (24). விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த தெற்கு பனையூரைச் சேர்ந்தவர் நாராயணன் இவரது மகன் சரவணகுமார் (30). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.இந்த நிலையில் முதலீடு செய்வதற்கு  2 பேரும் சேர்ந்து கோவிந்தராஜிடம் பழைய கார்களை வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பல்வேறு ஆசைவார்த்தைகளைக் கூறியதாக கூறப்படுகிறது.
அவர்கள் கூறியது உண்மை என்று நம்பி கோவிந்தராஜ் அவரிடம் இருந்த ரூ.25 லட்சத்தை ஆனந்த கிருஷ்ணனிடம் வழங்கி இருகிறார்.  ஆனந்த கிருஷ்ணன் பணத்தை பெற்று கொண்டு, பழைய கார்களை வாங்கி, வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார், ஒரு மாதம் மட்டும் கோவிந்தராஜிக்கு பணம் சொன்னது போல வழங்கி உள்ளனர். அதன் பின்னர் ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜிக்கு வாடகை பணம் வழங்காமல் காலம் தாழ்த்தி உள்ளார்.இதனால் கோவிந்தராஜ் தனது பணத்தை திருப்பித் தருமாறு ஆனந்த கிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார்.. இந்த நிலையில் ரூ.25 லட்சத்தை திருப்பி தருவதாக  நேற்று முன்தினம் ஆனந்தகிருஷ்ணன் கூறியதை அடுத்து , பணத்தை பெற்று கொள்வதற்கு எட்டயபுரம் அருகே சிந்தலைக்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு வருமாறு கோவிந்தராஜிடம் கூறியிருக்கிறார் ஆனந்தகிருஷ்ணன் .
கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக எட்டயபுரம் அருகே கோவிந்தராஜ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளின் மீது காரை மோதவிட்டார். இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தராஜ்-யை  மீட்டு  எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிசைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகிருஷ்ணன், சரவணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய  காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo