Onetamil News Logo

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Onetamil News
 

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.      


எட்டயபுரம் 2019 ஜூன் 13 ;தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம் பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம் பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.2.64 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை இன்று (13.06.2019) திறந்து வைத்தார்கள்.
                                                                                                     தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிகாட்சி மூலம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தமைக்காக மாவட்ட வருவாய் அலுவலர் டர்கடர் மு.வீரப்பன்,  பள்ளியின் சார்பில் மாணவி நந்தினி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
                                                                                                 அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன்,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் ஆகியோர்கள் கூடுதல் வகுப்பறைகளை பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றினார்கள். மேலும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் பெரியசாமிபுரத்தில் ரூ.1.11 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை திறந்து வைத்தார்கள்.
                                                                                                                                    இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், எட்டயபுரம் வட்டாட்சியர் வதனால், எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo