Onetamil News Logo

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி

Onetamil News
 

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி


 
1. துமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (தூடிசியா ) இணைந்து நடத்தவுள்ளது.
2. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,500/- ஆகும்.
3. உலகமயமாக்கலின் விளைவாக ,ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை ,கொள்முதலுக்கான வாய்ப்புகள் ,பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல்;, ஏற்றுமதி  இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின்  மாற்று விகிதங்கள், காப்பீடு  குறித்ததகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல்  போன்றவை பயிற்றுவிக்கப்படும்.  மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளைபற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.
4. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய எண்ணும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு முடித்த ஆண்   பெண் இருபாலரும் சேரலாம்.  இப்பயிற்சி கட்டணம் ரூ.3,500/- ஆகும்.  இப்பயிற்சி நடக்கும் இடம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கம், (துடிசியா), கதவு எண். 4/158 ராம் நகர், எட்டயபுரம் ரோடு, கே.டி.சி   டிப்போ அருகில் ,தூத்துக்குடி. 
 
இப்பயிற்சியில் சேர விரும்புவோர்  இப்பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை தமிழ்நாடுதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சிறுதொழில் சங்கம் (துடிசியா) அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
5. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலைநாட்களில் (திங்கள் முதல் வெள்ளிவரை) காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழி;ற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு ,ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.
 
துடிசியா கைபேசி எண்கள் 0461 – 2347005 - 9840158943
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo