Onetamil News Logo

மனித உரிமைக் காப்பாளரும் இயேசு சபை பாதிரியாருமான 83 வயது நிறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்குப் பதிவு ; கைது ;இணையவழி கண்டனப் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்கள்

Onetamil News
 

மனித உரிமைக் காப்பாளரும் இயேசு சபை பாதிரியாருமான 83 வயது நிறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்குப் பதிவு ; கைது ;இணையவழி கண்டனப் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்கள் 


மதுரை 2020 அக்டோபர் 15 ;ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் உரிமைக்காக போராடியதற்காக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மனித உரிமைக் காப்பாளரும் இயேசு சபை பாதிரியாருமான 83 வயது நிறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோதமாகக்  கைது செய்ததைக் கண்டித்து மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சமூகச் செயற்பாட்டாளர் ஆகியோரின் கண்டன உரையோடு 15.10.2020 மாலை 6.00 மணிக்கு  Zoom வாயிலாக நடைபெறும்
இணையவழி கண்டனப் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்கள் ;
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக சுமார் 30 ஆண்டுகளாக பணி செய்து வருபவர் அருட்திரு. ஸ்டேன் சுவாமி , தமிழகத்தைச் சார்ந்தவரும் கத்தோலிக்க இயேசு சபையைச் சார்ந்தருமான 83 வயது நிரம்பிய, இவர் ஜார்கண்ட் மாநிலம் உருவாவதற்காக பழங்குடியின மக்களின் பல்வேறு தலைவர்களோடு இணைந்து பணியாற்றியவர். மேலும் பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்கத் தொடர்ந்து ஜனநாயக வழியில் சட்டத்திற்குட்பட்டு பணி செய்து வந்த மனித உரிமைக் காப்பாளர் ஸ்டேன் சுவாமி மற்றும் 15 நபர்கள் மீது பீமா கொரேகான் வழக்கில் பிரதமரை கொலை செய்ய முயற்சித்ததாக பொய் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டிக்கிறோம். மேலும், உடனே இந்த பொய் வழக்கினை மத்திய அரசு எந்த நிபந்தனையுமின்றி உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பீமா கொரேகான் சம்பவம் தொடர்பான பொய் வழக்கில் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அனைவருமே பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் மனித உரிமைக் காப்பாளர்கள் ஆவர். எனவே பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மனித உரிமைக் காப்பாளர்களையும் எவ்வித நிபந்தனையின்றி உடனே  விடுதலை செய்யவதோடு நீதிமன்ற விசாரணையை துரிமாக முடிக்க  வேண்டும்.
மனித உரிமைகளுக்காக, பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு தளங்களில் குரல் கொடுத்து வரும் மனித உரிமைக் காப்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதை மத்திய மாநில அரசுகள் உடனே கைவிடவேண்டும்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி வழக்கினை விசாரணைக்கு எடுத்திருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் துரிதமாக நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள அனைவருக்கும் விடுதலை பெற்று, பாதிரியர் ஸ்டேன்சுவாமி அவர்களுக்கும் இந்த வழக்கில் இணைந்திருக்கும் மற்ற 15 நபர்களுக்கும் உடனடியாக ஜாமீன் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அவர்கள் பக்கம் நின்று உதவி செய்ய வேண்டும்.
 
இன்று மாலை நடைபெற்ற இணையவழி கண்டனப் பொதுக்கூட்டமானது மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன்  தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், M.P, கனிமொழி M.P, அ. கணேசமூர்த்தி M.P, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  எம்.எச். ஜவாஹிருல்லா, நவாஸ்கனி M.P, துரை இரவிக்குமார் M.P, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா. அதியமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் அருள்மொழி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை. இராமகிருட்டிணன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நெல்லை முபாரக், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் உ. வாசுகி, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் இயக்கத் தலைவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo