தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல கூட்டம்,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி போன்றோர் பங்கேற்பு
தூத்துக்குடி 2023 மார்ச் 18 ;தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல கூட்டம் தூத்துக்குடி அழகர் மகாலில் நடந்தது. பேரமைப்பின் மாநில தலைவரும் தேசிய முதன்மை துணை தலைவருமான வணிகர்களின் தலைவர் ஏ எம் விக்ரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கன்னியாகுமரி மண்டல தலைவர் டி பி வி வைகுண்ட ராஜா போன்றோர் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்கு திருநெல்வேலி மண்டல தலைவர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் அல்அமீன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா வரவேற்புரை வழங்கினார். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி போன்றோர் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்று பேசினார்கள். மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் சின்னத்துரை, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ரவி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னு சுவாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், தென்காசி மாவட்ட செயலாளர் கணேசன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தென்காசி மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொருளாளர் கோபம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் நாராயணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், தென்காசி மாவட்ட பொருளாளர் கலைவாணன், தென்காசி மாவட்ட மூத்த துணை தலைவர் முத்தையா கோனார், தூத்துக்குடி மாவட்டம் வெற்றி ராஜன், தென்காசி மாவட்டம் திவ்யா ரங்கன், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அலெக்ஸாண்டர், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கார்த்திகேயன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் ஜோசப் ராஜா, கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் விஜயன், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தசரதபாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஜபஸ் திலகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ் நன்றியுரை ஆற்றினார்.