Onetamil News Logo

நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்  நிதியமைச்சர் அருண்ஜெட்லி

Onetamil News
 

நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்  நிதியமைச்சர் அருண்ஜெட்லி 



                  
டெல்லி  பிப்ரவரி 1; நாடாளுமன்றத்தில் 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்  நிதியமைச்சர் அருண்ஜெட்லி,
ஜிஎஸ்டி முறை மூலம் மறைமுக வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது
மே 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது
அடிப்படையான பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது
8 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது
உலகிலேயே 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாறும்
தொழில்-வணிகம் செய்வதற்கு எளிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்தது ஒரு முக்கியமான முன்னேற்றம்
வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது
நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்துவதால் ஊழல், முறைகேடுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன
2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன
இந்தியாவின் இயற்கை வளங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன
டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஏழைகளை மானியம் நேரடியாக சென்று சேர்கிறது
இந்திய பொருளாதாரத்தில் அடிப்படை சீரமைப்பு பணிகளில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது
ஏழ்மையை நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் மோடி அரசின் நோக்கம்
வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 5வது இடத்திற்கு முன்னேறும்
8 விழுக்காடு ஒட்டு மொத்த வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுகிறது
2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது
நாட்டின் உற்பத்தி துறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வேகம் எடுத்துள்ளது
வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை மோடி அரசு மிகச்சிறப்பான முறையில் அதிகரிக்கச் செய்துள்ளது
உலகின் 7வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது
நாட்டின் ஏற்றுமதி 15 விழுக்காடு அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கிறோம்
வேளாண் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது
செலவு செய்யும் தொகையில் 1.5 மடங்கு வருமானத்தை விவசாயிகள் பெற வேண்டும் என்பதே இலக்கு
சீரமைப்பு நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளது
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடுமையாக உழைத்து வருகிறோம்
வேளாண் உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது
வேளாண்மை மற்றும் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட் அமையும்
வேளாண் துறை மேம்பாட்டிற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் இணைந்து செயல்படும்
வரும் காரிஃப் பருவத்திற்கான குறைந்த பட்ச ஆதார விலையை 150 சதவீதம் உயர்த்துகிறோம்
உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி விதிமுறைகளை எளிமையாக்க நடவடிக்கை
வேளாண் சந்தைகளை உருவாக்க, ரூ.2000 கோடியில் வேளாண் சந்தை மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்
மூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.1290 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறை 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது
கால்நடை வளர்ப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டுகள் வழங்கப்படும்
கரீஃப் பருவத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை, உற்பத்திச் செலவிலிருந்து 1.5 மடங்காக நிர்ணயிக்கப்படுகிறது
மீனவர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் மேம்பாட்டிற்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய செயல் திட்டம் வகுக்கப்படும்
இயற்கை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது
விவசாயக்கடன்களை 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
வரும் நிதி ஆண்டில் 2000 கோடி கழிவறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.5750 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நாடு முழுவதும் கழிவறைகள் கட்ட ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தேசிய ஊரக பகுதி சாலை திட்டம் மூலம் சுமார் 3.21 கோடி பேருக்கு வேலை வழங்க முடிவு
4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம்
மாணவர்களுக்கு கல்வியை நவீன முறையில் வழங்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்
கல்வி கற்பிக்கும் முறையை கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் மயமாக்க திட்டம்
குஜராத் மாநிலம் வதோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டம்
நாடு முழுவதும் கூடுதலாக 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்
இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் பெறும்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு முழுவதும் கூடுதலாக 1.5 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்
இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் பெறும்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பொறுப்பை மத்திய அரசு ஏற்க திட்டம்
10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
50 கோடி இந்தியர்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்கும்
நாடு முழுவதும் 24 அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் அமைக்கப்படும்
மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த ஏகலைவன் பள்ளிகள் அமைக்கப்படும்
உலகின் மிகப்பெரிய மருத்துவ சேவை திட்டத்தை அமல்படுத்துகிறது இந்தியா
காச நோயாளிகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த ரூ.600 கோடி ஒதுக்கீடு
தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்படும்
தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் உலகின் மிகப்பெரிய அரசு நிதியளிக்கும் சுகாதாரத் திட்டமாக இருக்கும்
தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயன்பெறுவார்கள்
ஜன் தன் திட்டத்தின் மூலம் 60 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன
மருத்துவமனைகளுடன் கூடிய 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக ஏற்படுத்தப்படும்
24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்
3 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற விகிதம் எட்டப்படும்
எஸ்.சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டுக்கான நிதி 50 சதவீதம் உயர்வு
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்
கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும்
பழங்குடியினருக்கு 305 திட்டங்கள்  ரூ.32,508 கோடி ஒதுக்கீடு
முத்ரா திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்
எஸ்.சி. பிரிவினருக்கு 279 திட்டங்கள் &8211; ரூ.52,719 கோடி ஒதுக்கீடு
சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ரூ.4000 கோடி ஒதுக்கீடு
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி எளிமையாக்கப்படும்
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் முக்கிய நோக்கம்
கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்துவது தீவிரப்படுத்தப்படும்
கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
சிறு, குறு தொழில் செய்வோரின் வரி பாரம் குறைக்கப்படும்
இந்த நிதி ஆண்டில் சுமார் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன
இபிஎஃப் திட்டத்தில் சேரும் புதிய ஊழியர்களுக்கு 12 சதவீதத்தை அரசு வழங்கும்
ரூ.2.04 லட்சம் கோடியில் 99 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக தரம் உயர்த்தப்படும்
10 சுற்றுலா நகரங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டு மிகச்சிறந்த சுற்றுலா தளமாக்கப்படும்
நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்
ஜவுளித்துறைக்கு ரூ.7140 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வரும் நிதி ஆண்டில் 9000 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
வரும் நிதி ஆண்டில் 4000 கி.மீ ரயில் தடத்தை மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கங்கையை தூய்மைப்படுத்துவது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo