வருமான வரி விலக்கு பற்றிய பெரிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வரி செலுத்துவோர் நலனுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அது பொய்க்காத வண்ணம் 2023-24 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் நீண்ட நாட்களாக வருமான வரி விலக்குக்காக காத்திருந்தனர். தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரி விலக்கு பற்றிய பெரிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வரி செலுத்துவோர் நலனுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில், வருமான வரி தொடர்பாக, புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தில் தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
ரூ.5 லட்சம் வரை கிடைத்தது. இதனுடன் வருமான வரி அடுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் இதன் மூலம் பயனடைவார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில், '2020 ஆம் ஆண்டில், 2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் புதிய தனிநபர் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தினேன். இப்போது இந்த அமைப்பில் உள்ள வரி கட்டமைப்பை மாற்றவும், அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்கவும், வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக அதிகரிக்கவும் முன்மொழிகிறேன்.'என்று கூறினார். 2023 இன் புதிய வருமான வரி வரம்பு புதிய வரி விதிப்பு திட்டத்தில் 0-3 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை. 3-5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்களுக்கு 5 சதவீத வருமான வரியும், 6-9 லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்றால் 10 சதவீத வரியும் 12-15 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும்
15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால் 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும். எளிமையான வகையில், ரூ.9 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள ஒருவர் ரூ.45,000 வரி செலுத்துவார், இது சம்பளத்தில் 5 சதவீதமாகும். தற்போது ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.15,000 குறைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர், 1.87 லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் வரி செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கையும் நிதி அமைச்சர் அனுமதித்தார், அங்கு மதிப்பீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் விலக்குகள் அல்லது விலக்குகளை கோர முடியாது. புதிய வரி விதிப்பில், அதிகபட்ச கூடுதல் கட்டணம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மேலும் அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதத்தை 39 சதவீதமாகக் குறைக்கும். 1992 பட்ஜெட்டில் புதிய வரி அடுக்குகள் இந்த தகவல் டுவிட்டரில் இந்தியன் ஹிஸ்டரி பிக் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1992 பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லாப் என்று தலைப்பு பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி அதில், ஆண்டிற்கு 28000 ஆயிரம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை. 28000 ஆயிரம் ரூபாய்க்கு வரி கிடையாது. 28001 ஆயிரம் முதல் 50000 ரூபாய் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 20 சதவீத வரி. ரூ.50001 முதல் 100000 வரை இருப்பவர்களுக்கு 30 சதவீத வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்.. அடுத்த வருடம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஜேபி அரசாங்கத்தின் முழுமையான பட்ஜெட் இது..
உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது- நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது
28 மாதங்களாக 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும்.- நிதியமைச்சர்
பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் இருக்கும்- நிதியமைச்சர்
உலக பொருளாதார ரீதியாக பத்தாவது இடத்தில் இருந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு உலகளவில் இந்தியா முன்னேறி உள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
தனிநபர் வருமானம் கடந்த நான்காண்டுகளில் உயர்ந்து ரூ. 1.97 லட்சமாக உள்ளது
நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7% ஆக உயரும் இது மற்ற நாடுகளை விட மிக அதிகம்.
உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.. சுதந்திர இந்தியாவின் 75வது பட்ஜெட்டில் உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்திய பொருளாதார உள்ளது. பெண்கள், இளைஞர்கள், தொழில்துறை, விவசாயிகளுக்கான பட்ஜெட் இது.. நிர்மலா சீதாராமன்
தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.. இந்திய பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது நல்ல எதிர்காலம் நமது பொருளாதாரத்துக்கு உள்ளது. நிர்மலா சீதாராமன்
பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் அடுத்த 100 ஆண்டு காலத்திற்கான புளூ பிரிண்ட் ஆக இந்த பட்ஜெட் இருக்கும் நிர்மலா சீதாராமன்..
7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் அளித்தல் பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது
ஸ்ரீ அண்ணா - சிறுகுறு தானியங்களுக்கான புதிய பெயர்
விவசாய வளர்ச்சி அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதி அமைக்கப்படும்
வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
சிறுதானியங்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிப்பு
மீனவர் நலனுக்காக 6000 கோடி ஒதுக்கீடு
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்
ஐந்தாண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்
157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்
ஏழு அம்சங்களுடன் கூடிய பட்ஜெட் 1.ஒருங்கிணைந்த வளர்ச்சி 2.கடைநிலை வரை வளர்ச்சி 3.கட்டமைப்பு மேம்பாடு 4.தேசத்தின் வளங்களை பயன்படுத்துவது 5.பசுமை வளர்ச்சி 6.இளைஞர்களின் ஆற்றல் 7.நிதி துறை வளர்ச்சி
பொருளாதரத்தில் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9.6 கோடி சமையல் எரிவாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கிஷான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.. ஒருங்கிணைந்த வளர்ச்சி ,சுற்றுலா துறைக்கு ஊக்கம், ஆகியவற்றுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது நிர்மலா சீதாராமன்
தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். சிறுவர்கள் பெரியோருக்காக தேசிய நூலகம் அமைக்கப்படும்
சிறு குறு விவசாயிகளுக்காக வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் 63 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகங்கள் உருவாக்கப்படும்
பல்வேறு துறைகளுக்கான மூலதன முதலீட்டு தொகை ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு.
கர்நாடக மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ரூபாய் 5000 கோடி ஒதுக்கீடு
மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வேணும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு
ரயில்வே துறைக்கு ரூ 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைக்க 50 புதிய விமான நிலையங்கள்
கர்நாடக வறட்சியை போக்க சிறப்பு நிதியாக ரூபாய் 5300 கோடி ஒதுக்கீடு
நாடு முழுவதும் குழந்தைகள், மாணவ மாணவிகள் ,பயன் பெரும் வகையில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்படும். சேமிப்புக் கிடங்குகள் பரவலாக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.. 2047 ஆம் ஆண்டுக்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழங்குடியினர் சமூகத்தை மேம்படுத்த ரூ 15,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.. நிர்மலா சீதாராமன்
பழங்குடியினபகுதியில் உள்ள மாதிரி பள்ளிகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் நியமனம்..
மூலதன செலவினங்களுக்கான முதலீடு ரூ 10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. சாலை பணிகளுக்காக ரூ 75000 கோடி ஒதுக்கீடு..
அரசு ஊழியர்களுக்கு கர்மயோகி திட்டம் அரசு ஊழியர்கள் தங்களது திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்ம யோகி திட்டம்
நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு
கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு.
அரசு ஊழியர்களுக்கு கர்மயோகி திட்டம் அரசு ஊழியர்கள் தங்களது திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக் கொள்ள கர்ம யோகி திட்டம்
நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு
கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு.
உணவு பாதுகாப்பு விவசாயிகள் பாதுகாப்பு குறித்து இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகிறது திணை உற்பத்தியில் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது
அனைத்து அரசு சேவைகளையும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும்.
ரூ 7000 கோடியில் இ கோர்ட் எனப்படும் மின்னணு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்
போக்குவரத்து திட்டங்கள் நிறைவேற்ற ரூ 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
நாடு முழுவதும் மூன்று செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும்
ஆதார், பான் கார்டு,டிஜி லாக்கர் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
நொடிந்து போகும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க தனி நிதி
5g மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
5g மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
ரசாயன உரம் பயன்பாட்டை குறைக்க கோவர்தன் திட்டம் கொண்டுவரப்படுகிறது
பசுமை வேளாண் திட்டத்திற்காக பி. எம் பிரணாம் திட்டம் நிறைவேற்றப்படுகிறது இதற்காக 19,700 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ரூ.10,000 கோடியில் ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்தன் திட்டம் அறிமுகம்
மாங்குரோவ் காடுகளை பாதுகாக்க திட்டம்
பான் கார்டு இனி அனைத்து துறைகளிலும் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் பங்களிப்போடு கூடுதல் நிதி
5g மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
ரசாயன உரம் பயன்பாட்டை குறைக்க கோவர்தன் திட்டம் கொண்டுவரப்படுகிறது
அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை வளர்க்க பயிற்சி வழங்கப்படும்
திறன் மேம்பாட்டை வளர்க்க நாடு முழுவதும் 30 மையங்கள் ஏற்படுத்தப்படும்
புதிதாக 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்
சுற்றுலா துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும்
அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்
சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிச்சைக்கு நடைமுறைக்கு மாற ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்பு வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்
சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு
இளைஞர்கள் உலகளாவிய வேலை பெற உதவும் வகையில் 30 மையங்கள் அமைக்கப்படும்
சிறு குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1சதவீதமாக குறைக்க நடவடிக்கை
7.5% வட்டியில் பெண்களுக்கான சேமிப்பு திட்டம்.
செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்காதன்னு உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் செல்போன் கேமரா லென்ஸ் தொலைக்காட்சி பாதங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை ரூ.4.5 லட்சம் கோடியில் இருந்து ₹9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 2.0 லட்சம் கோடி மதிப்புள்ள 31 கோடி செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளது
மாநிலங்கள் 3.5% நிதிப்பற்றாக்குறையில் உள்ளன.
தங்கம் வெள்ளிக்கு இறக்குமதி வரி உயர்வு
பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள் - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
தோட்டக்கலை துறைக்கு 2,200 கோடி நிதி ஒதுக்கீடு
-பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
வாகன புகை வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க நடவடிக்கை - நிதி அமைச்சர்