Onetamil News Logo

ஐ.டி. ஊழியர்கள் உயிரிழப்பால் தேனி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த  உறவினர்களின் கதறல்

Onetamil News
 

ஐ.டி. ஊழியர்கள் உயிரிழப்பால் தேனி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த  உறவினர்களின் கதறல்



ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் தீயில் சிக்கி சென்னை, ஈரோடு பகுதியை சேர்ந்த 9 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடல்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக விபத்து குறித்து அறிந்ததும் சென்னை, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு முதலே குவியத் தொடங்கினர். இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் அடையாளம் காட்டப்பட்டது. அப்போது அவர்கள் தீயில் கருகி கரிக்கட்டையாகி இறந்து கிடந்த உடல்களை பார்த்து கதறி அழுதனர்.அதன்பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐ.டி. ஊழியர்கள் உயிரிழப்பால் தேனி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்த அவர்களது உறவினர்களின் கதறல் காண்போரை கண்கலங்க வைத்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo