Onetamil News Logo

இலங்கை கழிப்பறையில்  அடைத்து சித்ரவதை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரும் கலெக்டர் யை  சந்தித்தனர்.

Onetamil News
 

இலங்கை கழிப்பறையில்  அடைத்து சித்ரவதை செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரும் கலெக்டர் யை  சந்தித்தனர்.


தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த விக்டர் (வயது 44), அஜித் (21), வினோத் (24), பிரவீன் (28), அமலன் (44), வெற்றிவேல் (30), லிபோ (44) ஆகிய 7 பேரும் மீன்பிடிக்க சென்ற பொழுது 
இலங்கை கடற்படையினர் அவர்கள் 7 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றதால்  பேச்சுவார்த்தைக்கு பிறகு இலங்கை அரசு தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 51 தமிழக மீனவர்களை விடுவித்தது.மீனவர்கள் 51 பேரும் காரைக்காலுக்கு வந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு  மீனவர்கள் 7 பேரும் வேன் மூலம் புறப்பட்டு  தூத்துக்குடி வந்து  கலெக்டர் ரவிகுமாரை, முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் படகுகளையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் மீனவர்கள் கூறும் போது, “எங்கள் படகு பழுதடைந்ததால் மன்னார் கடல் பகுதியில் தவித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகுக்குள் வேகமாக வந்தனர். நாங்கள் கூறிய எதையும் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. எங்களை சிறைபிடித்து மன்னார் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு கழிப்பறையில் எங்களை அடைத்து சித்ரவதை செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். 15 நாட்கள் ஜெயிலில் இருந்தோம். இந்த நாட்கள் 15 ஆண்டுகள் போன்று தோன்றியது. எங்களுக்கு சரியாக உணவு தர மறுத்து விட்டனர். 2 வாளி தண்ணீரில் 7 பேரையும் குளிக்குமாறு வற்புறுத்தினர். நாங்கள் விடுதலையாகி வந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படகுகளையும் மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo