அங்கமங்கலம் ஊராட்சியில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாமினை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேச்சு
தூத்துக்குடி 2023 செப் 22 ;தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணம் என்னவென்று சொன்னால் நோயில்லாத கால்நடைகளை உருவாக்க வேண்டும் என்பது தான்
மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடைபராமரிப்புத்துறையின் மூலம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாமினை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு தெரிவித்ததாவது:
முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகின்ற வகையிலே பல்வேறு திட்டங்களை முடித்து தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மாண்பை விளக்குகின்ற வகையிலே தந்திருக்கிறார்கள். அந்த வகையிலே இந்தமுகாம் இங்கு நடைபெறுகின்றது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி சொல்லவேண்டுமென்று சொன்னால் இன்றைக்கு முதன்முதலில் ஆசியாவிலேயே கால்நடைக்கென்று பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதை இங்குநான் சுட்டிக்காட்டகடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல் கால்நடைபாதுகாப்பதற்குமுகாம்களைகொண்டுவந்ததும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். அப்பேற்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுவிழா நடக்கிறது. கால்நடைகளை பற்றி சொல்லவேண்டுமென்று சொன்னால் விவசாயிகளுக்கு உற்றதோழனாக அவர்களுக்கு பொருளாதாரரீதியில் உதவுகின்ற வழிவகைகளை காணுகின்ற நிலை உள்ளது.இன்றைக்கு கிராமத்தில் இருக்கின்ற பொருளாதாரத்தை காப்பதுதான் கால்நடை பராமரிப்புத்துறை. ஒரு குடும்பத்திற்கு 3 மாடுகள் இருந்தால் போதும் அந்த மாடுகளை பாதுகாத்தால் அந்தமாடுகள் குடும்பத்தை பாதுகாக்கும் என்றநிலையை இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணம் என்னவென்றுசொன்னால் நோயில்லாத கால்நடைகளை உருவாக்கவேண்டும் என்பது தான்.நோயில்லாத நிலைகளை உருவாக்குவதற்காக எந்த நோயாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்க்கின்ற வகையிலே கால்நடைதுறைக்கு முக்கியத்துவம் அளித்து அந்த பணிகளை, வழிவகைகளை கண்டிருக்கின்ற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளங்கி வருகிறார்கள்.இன்றைக்கு இறைச்சியாக இருந்தாலும் சரி,பாலாக இருந்தாலும் சரி,முட்டையாக இருந்தாலும் சரிஅதிகமாக தேவைப்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகளுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாகசினை ஊசிபோடுகின்ற திட்டத்தினை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தான். குறிப்பாக அந்த ஊசியின் விலை ரூ.675. அதை முற்றிலும் இலவசமாக தந்து அதை போடுவதற்குரூ.175 கொடுத்தால் போதும் என்றநிலைகளைப் பெறுகின்றவகையிலேமாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல இன்றைக்கு கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவற்காக நமது மாநிலம் முழுவதும் 1000 மானா வாரி நிலங்களை தேர்ந்தெடுத்து அதில் புற்களை வளர்த்து பசுந் தீவனங்களை உருவாக்க விவசாயிகளுக்கு ரூ.3000-த்தை தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 7560 முகாம்களை நடத்துவதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியிருக்கின்றார்கள்.
கால்நடைகளை சிறந்த முறையில் பராமரித்தல், சந்தைப்படுத்துதல், பசுந்தீவன உற்பத்தி, தீவனமேலாண்மை, இடுபொருட்கள் மேலாண்மை என்று இங்கு வருகின்ற விவசாயிகளுக்கு தெரிவிக்கின்ற வகையில் இந்தமுகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. கால்நடைகளுக்கு நோய்கள் வராமல் தடுப்பூசிபோடுகின்ற பணியினை கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் செய்துவருகிறார்கள். அதுபோலராமானுஜம்புதூர்,செக்காரக்குடி,முக்காணி,நடுவக்குறிச்சி,போயால்புரம்,பரமன்குறிச்சிஆகிய இடங்களில் புதிதாககால்நடைகிளைநிலையங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்கின்ற பொழுது பல்வேறு இடங்களில் கால்நடைகள் மருத்துவர்கள் இல்லாத நிலை இருந்தது. எந்த ஊருக்கு போனாலும் மருத்துவர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரேநேரத்தில் 1099 மருத்துவர்களை நியமனம் செய்து குறிப்பாக நமது திருச்செந்தூர் பகுதியில் எல்லா இடத்திலும் மருத்துவர்கள் இருக்கின்ற நிலையை உருவாக்கியின்ற முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கின்றார்கள். நமது மாவட்டத்தில் இன்னும் 4 மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். விரைவில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நியமிக்கப்படுவார்கள். அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25000 கால்நடைவளர்ப்போர்களுக்கு கால்நடைகளுக்கான கடனுதவி வழங்குவதற்கான அட்டைகள் வழங்கிஉள்ளார்கள். வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தைதொடங்கியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இன்றைக்குமாடாக இருந்தாலும்,நாயாக இருந்தாலும் அந்த இனங்கள் எந்தவகையிலும் அழிந்துவிடக்கூடாதுஎன்பதற்காகவழிவகைகளைமாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் செய்துவருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் ஆட்டுக்கான ஆராய்ச்சி நிலையமும், நாய்களுக்கான ஆராய்ச்சி நிலையமும் துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கால்நடைகள் பராமரிக்கப்பட்டால் கிராமத்தினுடைய பொருளாதாரம் வளரும் என்ற வகையிலே இன்றைக்கு பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் எடுத்துவருகிறார்கள். நோயில்லா கால்நடைகளை உருவாக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டம் என்னவென்று சொன்னால் கால்நடைகள் வருடத்திற்கு ஒரு கன்றுதரவேண்டும் என்ற வகையில் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை சிறந்த முறையில் செய்ய வேண்டிய நிலைக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். விவசாயிகள் விழிப்புணர்வு பெறவேண்டும்,ஆடு வளர்ப்பது எப்படி,கோழி வளர்ப்பது எப்படி,என்னென்ன வகையிலே வளர்க்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற முகாம்கள் இன்று நடத்தப்பட்டிருக்கிறது. இந்த பகுதி விவசாயிகள் பல்வேறு பயன்களையும் அறிந்து அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.