Onetamil News Logo

தூத்துக்குடியில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த 5 பேர் கைது

Onetamil News
 

தூத்துக்குடியில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த 5 பேர் கைது


தூத்துக்குடி 2020 செப் 15 ;வடபாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயற்சி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி, முத்துகிருஷ்ணராபுரம், கல்லறை தோட்டம் அருகே கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த எலியாஸ் மகன் பிரஜின்(27), முருகேசன் மகன் அருண்குமார் (27), தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் அந்தோணி கிங்ஸ்டன்(25), திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் மகன் இஸ்மாயில்(23) மற்றும் தூத்துக்குடி வடக்கு பத்ரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கற்குவேல் மகன் அருண்குமார்(19)  என்பதும், இவர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட அங்கு ஆயத்தமாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo