Onetamil News Logo

அணில் மற்றும் காட்டாடு ஆகியவற்றை வேட்டையாடி, உட்கொண்ட, தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 5 பேர் ஊட்டி அருகே கைது ;90 நாட்கள் சிறையிலடைப்பு   

Onetamil News
 

அணில் மற்றும் காட்டாடு ஆகியவற்றை வேட்டையாடி, உட்கொண்ட, தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 5 பேர் ஊட்டி அருகே கைது ;90 நாட்கள் சிறையிலடைப்பு   


குன்னூர் 2020 செப் 13 ; அணில் மற்றும் காட்டாடு ஆகியவற்றை வேட்டையாடி, உட்கொண்ட, தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட 5 பேர் ஊட்டி அருகே கைது செய்யப்பட்டனர்.
 நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் உள்ள நகராட்சி ,உதகமண்டலத்திற்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இங்கு ஒரு பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் உள்ளன. நீலகிரி மலை இரயில் பாதையில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது. 
குன்னூர் அருகில் உள்ள கேத்தி பகுதியில் தனியார் காட்டேஜ் நடத்தி வருபவர் மணிகண்டன்(43), இவர் 6ம் தேதி இரவு, கேத்தி கோலானி மட்டம், முட்டிநாடு வனப்பகுதியில், தூத்துக்குடி மதுரை பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்று அங்கு, மலபார் ஸ்குரில் மற்றும் குரைக்கும் மானை வேட்டையாடி காட்டேஜ்க்கு கொண்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் டி.எப்.ஓ., குருசாமி தபோலா உத்தரவின் பேரில், ஏ.சி.எப்., சரவணன், குந்தா ரேஞ்சர் சரவண குமார் தலைமையில் ஆகியோர் சோதனை செய்தனர்.அங்கு, அனுமதி பெறாமல் நடத்தி வந்த காட்டேஜில், அரிய வகையான 'மலபார்ஸ்குரில்' எனும் அணிலை சமைத்து உண்டதும், குரைக்கும் மான் ஒன்றை,சமைக்க தயார் செய்ததும், தெரிய வந்தது.அப்போது அவர்களை பிடித்து, குந்தா கை காட்டி வனச்சரக அலுவலகத்தில் விசாரணை செய்தனர். விசாரணைக்கு சுற்றுலா பயணிகளான துாத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ஜான் ஆம்ஸ்ட்ராங் பாபு(41), அஜித் ரசிகர் மன்ற மாவட்ட தலைவரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜெபக்குமார்(44), தியேட்டர் உரிமையாளர் ராமையா(39), மதுரையை சேர்ந்த சுலைமான்(31), ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து சொகுசு கார், ஏர்கன் மற்றும் சமைப்பதற்காக தயராக வைத்திருந்த இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட  பின்னர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  90 நாட்கள் சிறையில் அடைத்தனர். 
இதுவரை, நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்காத நிலையில், அனுமதி இல்லாத காட்டேஜில் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து வனவிலங்குகள் வேட்டையாடிவந்தது குறித்து, வனத்துறை மற்றும் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பட்டியல் பிரிவில் உள்ள மலபார் ஸ்குரிலை வேட்டையாடி உட்கொண்டுள்ளனர். அனுமதி பெறாமல் நடத்தி வந்த இந்த காட்டேஜ் உரிமையாளர் இதற்கு முன்பு வேட்டையாடிய விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,' என்றனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo