Onetamil News Logo

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சூரங்குடி காவல் நிலைய  எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் சுமார்    1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேர் கைது -வாகனம் பறிமுதல்.

Onetamil News
 

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சூரங்குடி காவல் நிலைய  எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் சுமார்    1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேர் கைது -வாகனம் பறிமுதல்.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.L. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவுப்படி   விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இன்று  காவலர்கள் சூரங்குடி டு விளாத்திகுளம் செல்லும் குமாரசக்கனாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சாலையில் வந்த TN 89 CF 3162 TATA Dhosth வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது சுமார் 1 டன் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக கடத்த முயன்றது   தெரியவந்தது.  வாகனத்தை ஓட்டி வந்த 1)சின்னப்பாண்டி (35), த/பெ அழகர்சாமி , மதுரை . 2) பழனி (35), த/பெ புகழேந்தி , மதுரை,3)சரவணன் (24),த/பெ முருகன், சாயல்குடி,4)ரெங்கசாமி (55), த/பெ கருப்பசாமி, சாயல்குடி,5)விக்னேஷ், த/பெ மகாராஜா, மதுரை ஆகியோர்  ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. மேலும்  ரேஷன் அரிசியையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு வந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பாக  செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை தவிர்த்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்,வெகுவாக பாராட்டினார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo