Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 25ம் தேதி அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள்; நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தகவல்

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 25ம் தேதி அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள்; நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தகவல்


தூத்துக்குடி 2021 ஜூலை 24 ; தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 25ம் தேதி அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள்; நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தகவல் தெரிவித்துள்ளார்.
                இதுகுறித்து அவரது அறிவிப்பு ;  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 24.07.2021 முடிய மொத்தம் 7,040 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  இதன் தொடர்ச்சியாக 25.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் -  மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி, புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியில், கீழதட்டப்பாறை, வசவப்பபுரம்,அலிக்குடி, சமத்துவபுரம், புதுப்பட்டி, எள்ளுவிளை, அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், அருணாசலபுரம், பெருமாள்குளம், சண்முகபுரம், அத்திகாடு, அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையாபுரம், நாடார் மேல்நிலைப்பள்ளி - கோவில்பட்டி, சமுதாய நலக்கூடம் - கரிசல்குளம் , ஆரம்ப சுகாதார நிலையம்  - ஈராச்சி, செந்தூர் மஹால் - இலுப்பையூரணி, நகராட்சி அலுவலகம் - பூங்கா ரோடு, கோவில்பட்டி, டிவிஎல்எஸ் பங்களாதெரு- கோவில்பட்டி, சத்துணவு மையம் - இந்திரா நகர் - கோவில்பட்டி, அங்கன்வாடி மையம் - மருதன்வாழ்வு, அங்கன்வாடி மையம் - காக்காரம்பட்டி, அங்கன்வாடி மையம் - கீழ மீனாட்சிபுரம், சத்துணவு மையம் - சுப்பிரமணியபுரம், ஆரம்ப சுகாதார நிலையம்  - கழுகுமலை, சத்துணவு மையம் - கே.புதூர், ஆரம்ப சுகாதார நிலையம்  - கழுகுமலை, பேரூராட்சிகள் - கயத்தார், ஆரம்ப சுகாதார நிலையம்  - கயத்தார், சத்துணவு மையம் - சிதம்பரம்பட்டி,ஆரம்ப சுகாதார நிலையம்  - வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் - நொச்சிகுளம், ஆரம்ப சுகாதார நிலையம்  - கடம்பூர், கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - கூத்தலூரணி, சமுதாய நலக்கூடம் - கந்தசாமிபுரம், சமுதாய நலக்கூடம் - சுப்பிரமணியபுரம், சமுதாய நலக்கூடம் - குறளியம்பட்டி, சமுதாய நலக்கூடம் - லெட்சுமிநாராயணபுரம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - கவுண்டன்பட்டி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி - அயன்ராஜாபட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - எல்.வி.புரம் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
   பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,தெரிவித்துள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo