பறக்கும் பாம்பு - இவை அரிய வகை பாம்பு
ஐதராபாத்:
தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தின் கோஷமஹால் என்ற இடத்தில் உள்ள மரக்கடையில் பாம்பு புகுந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பாம்புகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பார்த்த போது அது பறக்கும் வகையை சேர்ந்த அரிய வகை பாம்பு என்று தெரிந்துள்ளது. பறக்கும் பாம்பை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிரைசோபிலியா ஒரனேட்டா என்ற இனத்தை சேர்ந்த இந்த பாம்பு பறக்கும் வகையைச் சார்ந்தது. இவற்றில் மூன்று ரகங்கள் உள்ளன. இது மூன்றில் ஒரு ரகமாகும். இப்பாம்புகள் தன் எதிரிகளான விலங்குகளிடமிருந்து தப்பிக்க, அல்லது தன் இரையை பிடிக்க, அல்லது காட்டினுள் நகர மரத்தில் இருந்து மரம் தாவ பறந்து செல்லும். மேலும் இது குறைந்த விஷம் உள்ள பாம்பு ஆகும். இது பூச்சிகள் மற்றும் பறவை முட்டைகளை உண்ணும். இவை நாட்டின் வடக்கு பகுதியில் காணப்படும். இது தெலுங்கானாவில் காண்பது இதுவே முதல் முறையாகும். ஒன்றரை அடி நீளம் கொண்ட இந்த பறக்கும் பாம்பு பிடிக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அதை பற்றி ஆய்வு செய்த பின்னர் பாம்பு காட்டில் பத்திரமாக விடப்படும் என பாம்புகள் பாதுகாப்பு அமைப்பின் துணை செயலாளர் அருண் குமார் கூறினார்.