Onetamil News Logo

பேரறிவாளன் நேற்று விடுவிக்கப்பட்டதை அடுத்து,தற்போது சிறையில் உள்ள 6 பேரும் விடுதலை ஆக வேண்டும் என்று பேரறிவாளன் கோரிக்கை 

Onetamil News
 

பேரறிவாளன் நேற்று விடுவிக்கப்பட்டதை அடுத்து,தற்போது சிறையில் உள்ள 6 பேரும் விடுதலை ஆக வேண்டும் என்று பேரறிவாளன் கோரிக்கை 


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் நேற்று விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இன்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். சென்னையில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு, தனது தாய் அற்புதம்மாளுடன் சென்ற பேரறிவாளன், தனது விடுதலைக்காக போராடியதற்காக நன்றி தெரிவித்தார்.மேலும், தனக்கு தூக்கு தண்டனை அறிவித்தபோது, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை அழைத்து வந்து உச்சநீதிமன்றத்தில் வாதிட வைகோ உதவி புரிந்ததை நினைவு கூர்ந்து, பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை தியாகராய நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற பேரறிவாளன், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், மீதமுள்ள 6 பேரும் விடுதலை ஆக வேண்டும் என்று கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo