உணவு,உடை,கலைகள் மாறிவிட்டது,கற்றுக் கொள்ளாத இனம் அழியும்,தமிழ்நாட்டை வட இந்தியர்கள் ஆளும் காலம் விரைவில் வரப்போகிறது; தமிழன்டா இயக்கத்தலைவர் ஜெகஜீவன் எச்சரிக்கை
உணவு,உடை மாறிவிட்டது,கற்றுக் கொள்ளாத இனம் அழியும்,தமிழ்நாட்டை வட இந்தியர்கள் ஆளும் காலம் விரைவில் வரப்போகிறது;தமிழன்டா இயக்கத்தலைவர் ஜெகஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது...கற்றுக் கொள்ளாத இனம் அழியும்,தமிழ்நாட்டை வட இந்தியர்கள் ஆளும் காலம் விரைவில் வரப்போகிறது. இதுதான் உண்மை,காரணம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த பச்சைத்தமிழர்கள் எத்தனை பேர்? என்று சிந்தித்து பாருங்கள்,மேலும் இன்றைய உணவு பண்பாடு,உடை பண்பாடு எப்படி? இருக்கிறது. நமது தமிழர்கள் வட இந்தியர்கள் ஆடைகளை அணிய ஆரம்பித்துவிட்டனர். உணவு பேல் பூரி முதல் சைனா உணவு பிரைடு ரைஸ் இப்படி பல, அரபு நாட்டு உணவுகளான பரோட்டா ,பிரியாணி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆரியர்கள் வந்தார்கள், பூர்வகுடி இந்தியர்கள் சத்ரிய சூத்திரர்கள் அடிமையானார்கள்,அமெரிக்கர்கள் வந்தார்கள், பூர்வகுடி செவ்விந்தியர்கள் வேட்டையாடப்பட்டு அழிந்தே போனார்கள். ஆங்கிலேயர்கள் வந்தார்கள், பூர்வ கூடிய ஆரியர்கள் இல்லாமலே போனார்கள், யூதர்கள் வந்தார்கள் பூர்வகுடி பாலஸ்தீனியர்கள் குடியிருக்க இடம் இன்றி அகதிகளானார்கள், சிங்களர்கள் வந்தார்கள் பூர்வகுடி ஈழத் தமிழர்கள் விரட்டி விடப்பட்டு வெளிநாடுகளில் அகதிகளானார்கள். இன்று வட இந்தியர்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள் தமிழர்களே தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள், நீங்கள் கடைகளை விலைக்கு விற்கலாம், நிலங்களை விலைக்கு விற்கலாம்,அதிகமான வாடகை தருகிறார்கள் என்று கூறலாம். ஆனால் உங்களுக்கு வருங்காலத்தில் வாரிசுகளுக்கு இடமில்லாமல் போய்விடும் மறந்து விடாதீர்கள்.
குறைவாக சம்பளம் வழங்கினால் பல மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று கூறி வடவர்களை அழைத்து வரும், தொழிலதிபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். தூத்துக்குடியில் சேட்டுகள் கடைகள் 200க்கு மேற்பட்ட கடைகள் இருக்கிறது. அவர்கள் அதிகமான வாடகையை வழங்குகிறார்கள் என்று கூறி அவர்களுக்கு மட்டும் கடையை வழங்குகிறீர்கள். நாளை தூத்துக்குடியில் வியாபாரிகள் இல்லாமல் வட இந்தியர்கள் தான் வியாபாரிகளாக மாறக்கூடிய காலம் விரைவில் வரப்போகிறது. மேலும் இன்று உங்கள் அனைவருக்கும் பணம் அதிகமாக வருகிறது. என்று நீங்கள் கூறலாம். ஆனால் தமிழருடைய பண்பாடுகள் அழிகிறது என்பதை மட்டும் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தமிழர்களுடைய உணவு, தமிழர்களுடைய பண்பாடு எல்லாம் தமிழ் மாநிலத்தில் காக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், மேம்படுத்த வேண்டும், மும்பையில் இருப்பவர்கள் அவருடைய உணவு, உடை,பண்பாடு அவர்கள் காப்பாற்ற வேண்டும், கேரள மக்கள் அவர்களுடைய பண்பாட்டை காப்பாற்ற வேண்டும், கர்நாடக மக்கள் அவர்களுடைய பண்பாடை காப்பாற்ற வேண்டும், டெல்லி மக்கள் அவர்களுடைய பண்பாட்டை காப்பாற்ற வேண்டும், குஜராத் மக்கள் அவர்களுடைய பண்பாட்டை காப்பாற்ற வேண்டும், அப்பொழுதுதான் அந்தந்த மாநில பண்பாடுகள் அழியாமல், களையாமல், நெளியாமல், சுழியாமல், பண்பாடு மேம்படுத்தப்படும் என்பதை மட்டும் மானிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சமூகம் எல்லா மக்களும் வளமாக இருக்க வேண்டும், எல்லா மக்களும் நலமாக இருக்க வேண்டும் ஆனால் யாருடைய பண்பாட்டையும் அழிக்கவோ கலைக்கவோ கூடாது அது அந்தந்த இனத்தை அழிப்பதற்கு சமமாகும்.