Onetamil News Logo

விக்டோரியா CBSE பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி தலைமையில் உணவு பொட்டலங்கள் ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டது. 

Onetamil News
 

விக்டோரியா CBSE பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி தலைமையில் உணவு பொட்டலங்கள் ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டது. 


தூத்துக்குடி ,2020 ஏப்ரல் 4 ;கொரோனாவினால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உணவு அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் சார்பாக இன்று  தூத்துக்குடி மாநகரில்,கொரோனா ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தூத்துக்குடி மாவட்டசெஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்களுடன் இணைந்து உணவு வழங்கப்பட்டது.   தூத்துக்குடி மாநகராட்சியின் வெவ்வேறு பகுதிகளில் முதியவர்கள் முதல் ஆதரவற்றவர்கள் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். 
இதனைக் கருத்திற் கொண்டு மாதா கோவில்,சிவன் கோவில் ,பேருந்து நிலையம்,பொது மருத்துவமனை மற்றும் ராஜாஜி பூங்கா அருகில் வசிக்கும் ஆதரவற்ற 100 ஏழை மக்களுக்கு இன்று அன்னம்மாள் பழைய மாணவியர் சங்கத்தால் உணவு வழங்கப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவியும் விக்டோரியா CBSE பள்ளி முதல்வருமான  சோபியா செல்வராணி தலைமையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  கல்லூரி முதல்வர் முனைவர் .அ.ஜாய்சிலின் சர்மிளா மற்றும் பழைய மாணவிகள் , தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் பொருளாளர்  வன்னியராஜன் கலந்து கொண்டனர்.  இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியரும் பழைய மாணவியர் சங்க நிர்வாகியுமான முனைவர்.சுதாகுமாரி செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo