மீண்டும் மாஸ்க் கட்டாயம்; அணியாவிட்டால் அபராதம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தமிழ்நாடு முழுவதும் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் இன்றைய பாதிப்பு 1,500 என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தெற்று தொடரந்து அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும்விதமாக அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இந்த நிலையில், மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344 என உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு சென்றவர்களின் எண்ணிக்கை 691 - ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏதுமில்லை. தொற்று பரவலைக் கண்டறிய சனிக்கிழமையன்று 25,821- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.