Onetamil News Logo

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 14 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நியமனம்! 

Onetamil News
 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 14 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நியமனம்! 


சென்னை 2022 ஜூலை 25 ;ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 14 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நியமனம்!
             அதிமுக வில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையே யார் தலைமை ஏற்பது என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் 14 மாவட்ட  செயலாளர்களை நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட செயலராக ஆர். தர்மரும், கோவை மாநகர் மாவட்ட செயலராக கோவை செல்வராஜும், மதுரை மாநகர் மாவட்ட செயலராக முன்னாள் எம்.பி., ஆர்.கோபாலகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலராக கொளத்தூர் கிருஷ்னமூர்த்தியும், சென்னை புறநகர் மாவட்ட செயலராக வெங்கட்ராமனும், எம்.எம்.பாபு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலராகவும், அம்பிகாபதி தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராகவும், ரமேஷ் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ராஜ்மோகன் திருச்சி புறநகர் மாவட்டசெயலராகவும், மதியளகன் வடசென்னை தெற்கு( மேற்கு) மாவட்ட செயலராகவும், அசோகன் சிவகங்கை மாவட்ட செயலராகவும், ரஞ்சித் குமார் காஞ்சிபுரம் மாவட்ட செயலராகவும், சிவலிங்கமுத்து திருநெல்வேலி புறநகர மாவட்ட செயலராகவும், தவசி தென்காசி தெற்கு மாவட்ட செயலராகவும், நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலர்களுக்கு கழக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் அறிக்கையில் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆதரவாளர்களையும் நீக்கியதாக தெரிவித்தார். இப்படி மாறி மாறி இருவரும் அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில் அதிரடியாக இன்று 14 மாவட்டச் செயலாளர்களை ஓ பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo