Onetamil News Logo

எஸ்டிகே ராஜன் அணியிலிருந்த முன்னாள் எம்.பி ஏடிஜே.ஜெயசீலன்,தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல டி.எஸ்.எப் அணியில் இணைந்தார் 

Onetamil News
 

எஸ்டிகே ராஜன் அணியிலிருந்த முன்னாள் எம்.பி ஏடிஜே.ஜெயசீலன்,தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல டி.எஸ்.எப் அணியில் இணைந்தார் 


தூத்துக்குடி. செப். 21 ; தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல எஸ்டிகே ராஜன் அணியில் இருந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிஜே.ஜெயசீலன் இன்று டி.எஸ்.எப் அணியில் இணைந்தார். 
         தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் டிஎஸ்எப் துரைராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்டிகே ராஜன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வந்தது. இதில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி அமோகமாக வெற்றி பெற்று துரைராஜ் மகன் கிப்சன், திருமண்டல லே செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவரது தலைமையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் செயல்பட்டு வருகிறது. 
         இந்நிலையில் எஸ்டிகே ராஜன் அணியை சேர்ந்த திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏடிஜே. ஜெயசீலன், அவரது துணைவியார் கமலி ஜெயசீலன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) டிஎஸ்எப் துரைராஜ் அணியான லே செயலாளர் கிப்சனுக்கு சால்வை அணிவித்து அவரது அணியில் தன்னை இணைத்து கொண்டார்.
        பின்னர் ஏடிஜே.ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறும்போது "நான் திமுக கட்சியில் இருந்தாலும். எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் உள்ள எல்லோரும் எனது உறவினர்களாகவும், நண்பர்களாகவுமே இருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் தற்போது லே செயலாளர் தலைமையில் நல்லதொரு நிர்வாகம் நடந்து வருகிறது. இப்போதைய நிர்வாகிகள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். 
          சாதாரணமாக இருந்த என்னை 1999-ல் கலைஞர் எம்பி-யாக ஆக்கினார். என்னை கடவுள்தான் வழி நடத்துகிறார். திருமண்டல வளர்ச்சிக்கு நானும் இணைந்து தொடர்ந்து பாடுபட வேண்டுமெனஎன் மனதில் ஓசையாக ஒலித்தது. இதனால், என்னால் முடிந்தவரை இந்த நிர்வாகத்தை மேலும் முன்னேற்ற இணைந்து செயல்படுவேன்" என்று கூறினார்.
         இந்நிகழ்ச்சியில் உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் உட்பட பலர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo