அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது,தேர்தல் நிதியாக வந்த பணத்தில் பெரிய தொகையை பாலியல் நடிகை ஸ்டிராமி டேனியலுக்கு 2016ம் ஆண்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டார். அமெரிக்காஅதிபராக இருந்தவர் டொனால்ட் டிரம்ப். தேர்தல் நிதியாக வந்த பணத்தில் பெரிய தொகையை பாலியல் நடிகை ஸ்டிராமி டேனியலுக்கு 2016ம் ஆண்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அந்த நடிகை எழுதிய புத்தகத்தில் டிரம்ப் கொடுத்த பணத்தை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் தன்னை போலீஸ் நெருங்குவதை அறிந்த டிரம்ப், மன்ஹட்டன் கோர்ட்டில் சரணடைந்தார். இந்நிலையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவலையறிந்த அவரது ஆதரவாளர்கள் கோர்ட் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.