தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கார் மற்றும் சரக்கு வாகனத்தில் கடத்திய 4 பேர் கைது - ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 844 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்கபணம் ரூபாய் 3,70,000/-, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கார் மற்றும் சரக்கு வாகனத்தில் கடத்திய 4 பேர் கைது - ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 844 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்கபணம் ரூபாய் 3,70,000/-, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், உத்தரவுபடி தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் நகர உட்கோட் தனிப்படை போலீசார் (25.06.2022) முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெய்வச்செயல்புரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கர்நாடகா பெங்களூர் பாடராயன்புரா பகுதியை சேர்ந்த ஜமீல் மகன் 1) வாசிம் பாஷா (34), பெங்களூர் ஸ்ரீராம்புரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் 2) செல்வா (35), திருநேல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் 3) காளிமுத்து (34) மற்றும் பெங்களூர் சௌடேஷ்வரி நகரை சேர்ந்த ஜான்சன் மகன் 4) அருள்ராஜ் ஜேசுபாலன் (36) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கார் மற்றும் சரக்கு வாகனத்தில் கடத்தியதும் தெரியவந்தது.
உடனே போலீசார் வாசிம் பாஷா, செல்வா, காளிமுத்து மற்றும் அருள்ராஜ் ஜேசுபாலன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 844 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்கபணம் ரூபாய் 3,70,000/-, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய TN 74 AM 1816 (Skoda Rapid Car) என்ற காரையும் TN 92 E 7003 (Ashok Lay Land Dost Load Auto) என்ற சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.