எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் ஸ்டார் கிட்ஸ் போட்டி,முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பங்கேற்பு !
நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் ஸ்டார் கிட்ஸ் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசு பெற்றனர்.
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஏராளமான பள்ளி மாணவர்களுக்கான ஸ்டார் கிட்ஸ் போட்டி நிகழ்ச்சி போத்தீஸ் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு, போத்தீஸ் பொதுமேலாளர் சரவணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவ்விழாவை முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், மேடையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகளும் மரக்கன்று நட்டனர். விழாவில் பேசிய ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு, நம் மாணவ செல்வங்கள் உங்கள் எல்லாருடைய பெற்றோர்களும் உங்களது திறமையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக நடத்தி வருகிறோம். பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக சென்று திறன் பயிற்சிகளை அளித்து வருகிறோம். மாணவர்களுக்கு பொறியியல் சம்பந்தமாக சொல்லிக்கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு இருக்கிற திறமையை வளர்க்கிறோம். அந்த திறமைகளை சொல்லி கொடுப்பதற்கு எங்களது கல்லூரி நிர்வாகம் பெருமுயற்சி எடுத்திருக்கிறது. இந்த ஸ்டார் நிகழ்ச்சி மாணவர்களின் திறன் வளர்வதற்கு பயன்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பேசுகையில், மாணவர்கள் 3 முதல் 12 வரை உள்ள மாணவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் எப்.எக்ஸ். கல்லூரி நிர்வாகம் சிறப்பாக இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர். இதற்காக பள்ளி கல்வி துறை சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாணவர்கள் தங்களது திறமைகளை பல்வேறு போட்டிகளின் மூலம் நிரூபித்து வெற்றி காண்கிறார்கள். இக்கல்லூரி மாணவர்கள் பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து பாரத பிரதமர் பாராட்டை பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இயக்குநர் முனைவர் ஜான்கென்னடி பேசுகையில், பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முன்னேறியிருக்கிறார்கள். இங்கு பயிலும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையை கற்றுக்கொடுத்து வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள். இந்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்கவேண்டும் என்று பேசினார்.
இதனையடுத்து, ஓவியப் போட்டி, ரங்கோலி போட்டி, கட்டுரை போட்டி, பானையில் ஓவியம் வரையும் போட்டி, பாட்டு போட்டி, நடன போட்டி, குழு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர் வத்துடன் பங்கேற்ற்று வியப்பில் ஆழ்த்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், இயக்குநர் முனைவர் ஜான்கென்னடி, இயக்குநர் முனைவர் முகமது சாதிக், கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியேல் செய்திருந்தார்.