Onetamil News Logo

பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை,தமிழன்டா கலைக்குழு நிறுவனர் ஜெகஜீவன் தலைமையில் 60 மாணவ,மாணவியருக்கு தப்பாட்டம்,ஒயிலாட்டம்,கட்டைகால் ஆட்டம்,கரகாட்டம் மாடாட்டம்,காண்போரை வியக்கவைத்தது

Onetamil News
 

பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை, தமிழன்டா கலைக்குழு நிறுவனர் ஜெகஜீவன் தலைமையில் 60 மாணவ,மாணவியருக்கு தப்பாட்டம்,ஒயிலாட்டம்,கட்டைகால் ஆட்டம்,கரகாட்டம் மாடாட்டம்,காண்போரை வியக்க வைத்தது.     


தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா ஹெசியா வரவேற்புரையாற்றினார்.
                                       மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த மாநகராட்சி பள்ளியில் வருகை குறைவாக இருந்தது. சில குறைபாடுகளும் இருந்ததாக கூறினார்கள். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அந்த குறைபாடுகளை எல்லாம் போக்குவதற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்ட பின் மாணவ மாணவிகளின் வருகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. உங்களது திறமையை வளர்த்து கொள்ளும் வகையில் இந்த பள்ளியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு உங்களுக்கு பல அறிவுரைகளை இங்கு வந்து கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் நான் உள்பட கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்துள்ளோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் அது போல் உங்களுடைய வளர்ச்சிக்கு பள்ளிப்படிப்பு முக்கியம் அதே வேளையில் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பள்ளி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நம்முடைய முதல்வர் ஆட்சியில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஓதுக்கீடு செய்து எழுத்தறிவு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். உங்களுடைய ஆசிரியரும் மெழுகுவர்த்தியை போல் உருகி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தாய் தந்தையர்களின் நல்ல அறிவுரைகளை கேட்டு எதிர்காலத்தில் பெரிய பொறுப்புகளுக்கு வரவேண்டும் அதன் மூலம் தமிழகம் பெருமை கொள்ள வேண்டும் என்று பேசினார்.
           கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் சிலம்பாட்டம் நாடகம் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு நிகழ்ச்சி அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தமிழன்டா கலைக்குழு நிறுவனர் ஜெகஜீவன் தலைமையில் 60 மாணவ,மாணவியருக்கு தப்பாட்டம்,ஒயிலாட்டம்,கட்டைகால் ஆட்டம்,கரகாட்டம் மாடாட்டம் போன்ற நடனங்கள் 25 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு அரங்கம் ஏற்றப்பட்டது, இந்த நிகழ்ச்சிகளில்  தப்பு அடித்த அழகு,மாணவ மாணவியரின் அழகு நடனங்கள்,காண்போரை வியக்கவைத்தது.
                     விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், கவுன்சிலர்கள் பாப்பாத்தி, வைதேகி, முன்னாள் கவுன்சிலர் பால சுப்பிரமணியன், ஆதவா அறிக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், முன்னாள் மாணவர்கள் சுபாராமன், தர்மராஜ், மயில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரலட்சுமி, துணைத்தலைவர் கர்ணராஜ், உறுப்பினர்கள் கண்ணன், நாகராஜ், லாரன்ஸ், சந்திரலேகா, பாக்கியலட்சுமி, சோனியா, விஜில்டா, பபிதா, இன்பன்ஷா, முத்துக்கனி, சிறப்பு ஆசிரியர் ராஜா சண்முகம் சாரோன், தொண்டு நிறுவனர் தனராஜ், விகேன்டிரஸ்ட் உறுப்பினர் சீனிவாசன், தோள் கொடு தோழா அமைப்பாளர் முனைவர் மலைராஜன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கீதாஞ்சலி, மாரிப்பிரியா, ஷாலினி, மெர்லின்,  சோபியா, வானவில் மன்ற கருத்தாளர் அருணாஜோதி, பெண் குழந்தைகளுக்கு காராத்தே பயிற்சியாளார் ஜாபர்உசேன், ஆசிரியர்கள் அமலி, முத்து கற்பகம், சங்கரி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட 2000 பேர் கலந்து கொண்டனர்.  பட்டதாரி ஆசிரியர் ஜெபா எபனேசர் நன்றியுரையாற்றினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo