Onetamil News Logo

மூன்று குழந்தைகளை பெற்றால் அரசு  வழங்கும் பரிசு ரூ 73 லட்சம்  ;புதுமணத்தம்பதிகளுக்கு ஜாக்பாட் 

Onetamil News
 

மூன்று குழந்தைகளை பெற்றால் அரசு  வழங்கும் பரிசு ரூ 73 லட்சம்  ;புதுமணத்தம்பதிகளுக்கு ஜாக்பாட் 


தென்கொரியா 2021 ஜன 8 ;தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.
இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங்.   
 தென்கொரியாவில் திருமணமான தம்பதியினர் மூன்று குழந்தைகளை பெற்றால் அரசு  73 லட்ச ரூபாய் பரிசாக வழங்குகிறது. என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தென்கொரியாவுக்கு புதுமணத்தம்பதிகள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள், தென்கொரிய குடியுரிமை வாங்குவதற்காகவும் பலர் வரிசையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   
மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 73 லட்சத்து 33 ஆயிரத்து 75 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தம்பதியினர் முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும், அதன் பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போது கடன் தொகையில் 30 சதவீத தள்ளுபடி செய்யப்படும், இறுதியாக மூன்றாவது குழந்தை பெற்றால் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தென்கொரியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.                                  
                           கொரிய உணவுமுறையானது அரிசி, னூடுல்ஸ், மாமிசம், மீன், காய்கறிகள் முதலியவற்றை அடிப்படையாக கொண்டது. கொரிய பாரம்பரிய உணவில் அரிசிச் சதாத்துடன் எத்தனை வகையான பக்க உணவுகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொறு உணவு முறையின் போதும் வெவ்வேறு விதமான பக்க உணவுகள் இடம்பெறும். கிம்சி (kimchi), இது முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை காரம் சேர்த்து சில நாட்கள் நொதிக்க வைத்து பரிமாறப்படும் ஒரு பாரம்பரிய உணவு. கொரிய உணவுகளில் வழக்கமாக சுவையூட்ட எள் எண்ணெய், நெரிகட்டிய சோயா பேஸ்ட், சோயா சாஸ், உப்பு, பூண்டு, இஞ்சி, மற்றும் ஒரு மிளகாய் பேஸ்ட் பயன்படுத்தபடுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo