Onetamil News Logo

தமிழக அரசே! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரி!" -என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல், 20 இலட்சம் இல்லங்களில்  குடும்பத்துடன் கோலம் தீட்டும் போராட்டம்

Onetamil News
 

தமிழக அரசே! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரி!" -என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல், 20 இலட்சம் இல்லங்களில்  குடும்பத்துடன் கோலம் தீட்டும் போராட்டம்


மதுரை 2020 செப் 13;  "தமிழக அரசே! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரி!" -என்றகோரிக்கையை முன்நிறுத்தி, இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல், 20 இலட்சம் இல்லங்களில்  குடும்பத்துடன் கோலம் தீட்டும் போராட்டம் நடந்தது.   
இதுகுறித்து கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு  தமிழ்நாடு & புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் கண குறிஞ்சி,ஆலோசகர்  ஹென்றி திபேன் சார்பாக,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....  
           "தமிழக அரசே! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரி!" -என்றகோரிக்கையை முன்நிறுத்தி, இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல், 20 இலட்சம் இல்லங்களில்  குடும்பத்துடன் கோலம் தீட்டும் போராட்டம்,மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் இயக்கங்களின் முன்னோடிகள், மாணவர் . அமைப்பினர், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கோலம் தீட்டும் போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தத்தம் இல்லங்களின் முன் கோலப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.மகளிர் இயக்கங்கள் காலை 7 மணி முதற்கொண்டு கோலம் தீட்டும் போராட்டத்தில்  தங்களது பள்ளிப்பருவக் குழந்தைகளுடன் திரளாகப் பங்கேற்று வருகின்றனர்.
இக்கோலப் போராட்டத்தை அனைவரும் தங்களது முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர். இப்போராட்டம்  மாலை வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. 
இக்கோலப் போராட்டம் நேற்றிலிருந்தே தமிழகத்தில் அதிர்வுகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசே! தேசியக் கல்விக் கொள்கையை நிராகரி!
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம் 
குழந்தை விரோதக் கல்விக் கொள்கை வேண்டாம் 
தமிழைப் புறக்கணிக்கும் கல்விக் கொள்கை வேண்டாம் 
இந்தி - சமஸ்கிருதத்தை திணிக்கும் கல்விக் கொள்கை வேண்டாம் 
மனு தர்ம இழிவைத் திணிக்கும் கல்விக் கொள்கை வேண்டாம் 
என்ற முழக்கங்களைக் கொண்டு கோலம் தீட்டும் போராட்டம் 20 இலட்சம் குடும்பங்களுக்கு மேலாகவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எனவே தமிழ் நாட்டின் கல்வி வளத்தை நாசமாக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2020 ஐ தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் எனக் கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு மீண்டும் தமிழக அரசைக் கோருகிறது. தொடரும் இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கல்விப் பாதுகாப்புக்  கூட்டமைப்பு அறைகூவல்  விடுக்கிறது இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo