Onetamil News Logo

ஜிஎஸ்டி வரி பெட்ரோல் டீசலுக்கு கொண்டு வருமா மத்திய அரசு ?  பொதுமக்கள் கேள்வி ?   

Onetamil News
 

 ஜிஎஸ்டி வரி பெட்ரோல் டீசலுக்கு கொண்டு வருமா மத்திய அரசு ?  பொதுமக்கள் கேள்வி ?   


                                                     
 பல ஆண்டு அரசியல் இழுபறிக்குப் பின் ஆகஸ்ட் 3, 2016 (புதன்கிழமை) அன்று மத்திய மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்ற புதிய வரியை விதிக்க அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்தத்தை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை ஏற்றுக்கொண்டது. இந்த சட்டத் திருத்தம் ஏற்கெனவே மக்களவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.                                                                                    
 இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்படும் என்ற முறையை மாற்றி, கடந்த ஜூலை முதல் நாள்தோறும் பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ரூ.67.71 ஆக விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.72.95 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கடந்த 45 நாட்களுக்குள் மட்டும் பெட்ரோலின் விலை ரூ.5.24 உயர்ந்துள்ளது. இதனால் பணிக்கு செல்லும் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என அடித்தட்டு மக்கள் வரை பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். நாள்தோறும் விலை மாற்றம் செய்யப்பட்டு படிப்படியாக விலை உயர்த்தினால் மக்கள் கண்டனம் தெரிவிக்க மாட்டார்கள் என திட்டமிட்டு இந்த முறை கடைபிடிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோன்று கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ரூ.58.49 ஆக விற்பனை செய்யப்பட்ட டீசல், ரூ.3.35 உயர்ந்து இன்று ரூ.61.84 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சமுக ஆர்வலர் செல்வகுமார் கூறியதாவது..ஒரே வரி என்பது வேறுபாடு இல்லாமல் எல்ல பொருளுக்கும் கொண்டு வரும் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கு கொண்டு வந்தால் பெட்ரோல் விலை குறைந்து விடும் ஆனால் கொண்டுவர மறுக்கின்றனர்.
                                                                                                                                                                                                           
 GST வரி என்பது என்ன?
Goods and Services Tax என்பதின் சுருக்கம் தான் GST. சரக்கு மற்றும், சேவை வரி என்று தமிழில் கூறுவர். இந்தியாவில் இதுவரை மத்திய, மாநில அரசுகள் பொருட்கள் மேல் பல வரிகளை விதிக்கின்றன. அவை, (1) பொருள் உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி (Excise duty), (2) பொருள் விற்பனை மீது மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி, (3) மாநிலங்களுக்கிடையே விற்பனை நடைபெறும்போது எந்த மாநிலத்தில் விற்பனை ஏற்படுகிறதோ அம்மாநிலத்தால் மத்திய விற்பனை வரி விதிக்கப்படும், (4) சேவைகள் மீது மத்திய அரசு சேவை வரி விக்கிறது, (5) சினிமா போன்ற பொழுபோக்கு வியாபாரத்தின் மீது கேளிக்கை வரி மாநிலங்களால் விதிக்கப்படும், (6) ஒரு மாநிலம் அல்லது ஒரு உள்ளாட்சி தங்கள் பகுதிக்குள் வரும் பொருட்கள் மீது நுழைவு வரி, அல்லது ஆக்ட்ராய் உள்ளது, (6) மாநிலங்கள் விதிக்கும் வாகன வரி, என பல வரிகள் பொருட்கள் சேவைகள் மீது உள்ளன. இவை அனைத்தையும் நீக்கிவிட்டு அனைத்துப் பொருட்கள், சேவைகள் மீது (பெட்ரோல், மது வகைகள் நீங்கலாக) ஒரே வரி நடைமுறைக்கு வந்துள்ளது.
                                                                                                                                               மத்திய, மாநில அரசுகள் தனித்தனியே பொருட்கள் மீது வரி விதிக்கின்றன. ஒரு பொருள் உற்பத்தி செலவு ரூ 100 அதன் மீது 16 சதம் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. அதாவது ரூ 16. அதன் பிறகு ரூ 116 என்ற விற்பனை விலை மீது 12 சதம் (ரூ 13.92) விற்பனை வரி வசூலிக்கிறது. ஆக, பொருளின் மொத்த விலை ரூ 129.92 ஆகும். இதில் மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரி மட்டுமே விற்பனை ரசீதில் உள்ளதால், அந்த வரி மட்டுமே நுகர்வோருக்கு தெரிகிறது. இந்த இரு வரிகளையும் இணைத்து GST என்ற ஒரே வரி 20% என்று இருந்தால் பொருளின் விலை ரூ 120 என்று தான் இருக்கும். எனவே, பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், இதுவரை 14 சதமாக உள்ள சேவை வரி, இனிமேல் GSTயில் 20 சதமாக உயரும்போது சேவைகளின் விலை உயர்ந்துள்ளது..

இதுவரை தமிழகத்தில் உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது 2 சதம் விற்பனை வரியை தமிழக அரசு வசூலிக்கிறது. இதனால் மட்டுமே ரூ 3 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது.  

இப்போது நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தில் ஒரு மாநிலத்திற்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்வதாகக் கூறுகிறது. ஆனால், இதனை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்க சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த சட்ட திருத்தம் கூறுகிறது. 
                                                                                                                                                நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்கும்,  20 சதம் ஜிஎஸ்டி வரியானது மத்திய ஜிஎஸ்டி என்றும் மாநில ஜிஎஸ்டி என்றும் பிரித்து வரிகள் சமர்பிக்கப்படும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்குகள் செல்லும். மாறாக, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்து வேறு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால், அதற்கும் 20 சதம்தான் ஜிஎஸ்டி. அதில் மத்திய பங்கு மத்திய அரசுக்கு செல்லும், ஆனால், மற்றொரு பங்கு எந்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டதோ அந்த மாநிலத்திற்கு செல்லவேண்டும். இதனை ஐஜிஎஸ்டி என்ற பொது கணக்கில் வரவு வைத்து பின்பு பொருள் சென்று சேர்ந்த மாநிலத்தில் உள்ள அரசுக்கு அந்த வரி பணம் சென்று சேரும்.

இதனை எளிமைப்படுத்துவதற்காக ஜிஎஸ்டி நெட்வொர்க் என்ற ஒரு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனம், முழுவதும் கணினி மயமான வரி செலுத்தும் முறையை ஏற்படுத்திவிட்டது. எல்லா மாநிலங்களுக்கும் தங்கள் வரி வசூலிக்கும் நிர்வாக அலுவலகங்களை கணினிமயமாக்கவும், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந் நிறுவனம் உதவி செய்கிறது. பல தனியார் கணினி மென்பொருள் நிறுவனங்களும் இந்த வேலையை செய்துள்ளன.
                                                                                                                                                ஜிஎஸ்டி வரியை வங்கிகளில்தான் கட்டவேண்டும், இணையதளம், வங்கி சேவையில் வரி செலுத்துவது ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தனியான பண வரிவர்த்தனை வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதுவரை பலவித வரிகளை செலுத்திய வியாபாரிகள் இனிமேல் ஒரே ஜிஎஸ்டி வரியை செலுத்தவேண்டும். 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo