Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியருக்கு இன்று பிறந்தநாள் ;ஒன் தமிழ் நியூஸ் வாழ்த்து தெரிவிக்கிறது.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியருக்கு இன்று பிறந்தநாள் ;ஒன் தமிழ் நியூஸ் வாழ்த்து தெரிவிக்கிறது.


தூத்துக்குடி 2020 மே.31: தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தில் இந்திய ஆட்சி பணி அதிகாரியான மாவட்ட ஆட்சித்தலைவராக சந்திப் நந்தூரி நியமிக்கப் பட்டு மாவட்ட நிர்வாகத்தை அருமையாக வழிநடத்துகிறார். அவரே  மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை சிறப்பாக செய்துள்ளார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தினார்.
 மாவட்ட ஆட்சியர்  நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்து. அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தினார்.. வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும்.  கூடுதல் ஆட்சியர், உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.இதனால் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாராட்டுக்கள்.
இந்திய ஆட்சிப்பணி அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். இந்த பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தினார். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கின்றனர். சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான சிறப்பு விருதை, மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது.
ஆட்சியர்  அணுகுமுறையும், திட்டங்களை செயல்படுத்தும் முறையும் ரொம்ப வித்தியாசமானது. பொதுவாக ஆட்சியர் வருகையென்றால் அதிகாரிகளும், மக்களும் பரபரப்பாகி விடுவார்கள். ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி  என்றால் பள்ளி குழந்தைகள் முதல் பாமர மக்கள் வரை அனைவருக்கும் பிடித்தவர்.
மக்களின் மனதில் இடம்பிடித்து,பல்வேறு  விருதுக்கும் தேர்வாகியுள்ள ஆட்சியர் இன்று வரை துளியளவும் ஆர்வம் குறையாமல், எளிமையான அணுகுமுறையால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ள இவர், கிராமங்களிலும் சர்வசாதாரணமாக வலம் வருகின்றார்.
அலட்சியமாக வேலை செய்யும் அரசு ஆசிரியர்களை அலர்ட் செய்ய வைத்திருக்கிறார் ஆட்சியர்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க  அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் இவர், எங்கே சென்றாலும்  ஒட்டு மொத்தச் செயல்பாட்டை தெரிந்துகொண்டு தான் செயல்படுவார்.
புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டு அதில் மக்கள் ஆர்வமாக பங்கேற்க இவர் செயல்பட்ட விதத்தை வாசகர்கள் சொல்லி சிலாகித்து போகிறார்கள். 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக சிறப்பாக பணியாற்றி கொணடிருக்கும் மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பெற்று மாவட்ட மக்களின் பாராட்டை பெற்ற மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறது ----ஒன் தமிழ் நியூஸ் செய்திப்பிரிவு தலைமைச்  செய்தியாளர் எஸ்.ஜெகஜீவன். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo