Onetamil News Logo

பணமே இல்லாமல் இருதய சிகிச்சை - உதவுங்கள் உதவி பெறுவீர்கள்

Onetamil News
 

பணமே இல்லாமல் இருதய சிகிச்சை - உதவுங்கள் உதவி பெறுவீர்கள்  



அகமதாபாத் அக்டோபர் 21;    இதய மாற்றீட்டு சத்திரச் சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை (heart transplant, cardiac transplant) இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது தீவிர குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ளவருக்கு இன்னொரு மனிதனில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான இதயத்தை மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சையாகும். 2008ஆம் ஆண்டு நிலவரப்படி பெரும்பாலும் அண்மையில் இறந்த உடல் உறுப்புக் கொடையாளரின் வேலை செய்கின்ற இதயம் எடுக்கப்பட்டு நோயாளிக்குப் பொருத்தப்படுகின்றது. நோயாளியின் இதயம் அகற்றப்படலாம் அல்லது தனது இடத்திலேயே கொடையாளி இதயத்திற்கு ஆதரவாக செயல்படுமாறு விட்டு வைக்கப்படலாம். மாற்று இதய சிகிச்சை மேற்கொண்டவர்களின் வாழ்நாள் சராசரியாக 15 ஆண்டுகள் வரை கூடுவதாக மதிப்பிடப்படுகின்றது. இதய மாற்று அறுவை சிகிச்சை இதய நோய்க்கான மருத்துவத் தீர்வாக கருதப்படுவதில்லை; நோயாளியின் வாழ்நிலை தரத்தை உயர்த்தும் உயிர்காப்பு சிகிச்சையாக கருதப்படுகின்றது.
நீண்ட காலம் இதய நோய் உள்ளவர்களுக்கும், இதயத் தசை நோய்கள் காரணமாக இதயம் செயலிழக்கும் நிலையில் உள்ளவர்களுக்கும் இது தேவைப்படுகிறது. பொதுவாக மூளை செயலிழந்த ஒருவரிடமிருந்து இதயம் பெறப்படுகிறது. இவ்வாறான சத்திரசிகிச்சையில் இதயம்-நுரையீரல் மாற்றுவழி இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. நோயாளியின் இதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு இடது வலது சோனை அறைகளிலன் சுவரின் ஒரு பகுதியை விட்டு ஏனைய இதயப்பகுதி அகற்றப்படுகிறது. வழங்கியில் இருந்து பெறப்பட்ட இதயம் நோயாளியின் விடப்பட்ட இதயத்தின் பகுதிகளுடன் பொருந்துமாறு இணைக்கப்படுகின்ற்து. முடியுரு நாடிகளுடனும் நாளங்கள் போன்ற பிரதான குருதிக் குழாய்களுடனும் புதிய இதயம் இணைக்கப்படுகின்றது.                        
                                                                                                                                                                                                              ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட்   "பணமே   இல்லாமல் இருதய சிகிச்சை"  என்று பிரபலமாக  உள்ளது,  பணம் செலுத்தும் இடம் என்பதே  இந்த மருத்துவமனையில் இல்லை.
ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு  இலட்சங்களுக்கிடையே  செலவு  ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,
ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட்,  கடந்த 17 ஆண்டுகளாக    இலவசமாக  எல்லா  இருதய நோய்களையும்    குணப்படுத்தி  வருகிறது.
80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான  மக்கள்  சோதனை செய்து உள்ளனர்,  மற்றும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள்  முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு  உள்ளது
தன்னலமற்ற அதே சேவை  தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது  கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது
இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட  3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு,  இலவச அறுவை சிகிச்சையில்  முன்னுரிமை வழங்கப்படும்
இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள்,  அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .
310 படுக்கைகள்  வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை  இலவசமாக செய்ய போகிறார்கள் .
இந்த மருத்துவமனையின்  சேவை  தேவைப்படும்  இருதய நோயாளிகளுக்கு     வழிகாட்டுவதன் மூலம்,  நீங்களும்  இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்
முகவரி :
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை 
ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட  சாலை, ராஜ்கோட் - 360005.
ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க  சாலை,
மாவட்டம்: அகமதாபாத் - 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com                                                                                                                                         
                                                                                                                                                                                                       
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo