பராமரிப்பு பணிகள் முழுமை அடையாவிட்டால் வாகைக்குளம் டோல்கேட்டில் கட்டண வசூல் நிறுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவு
தூத்துக்குடி 2023 செப் 11 ;பராமரிப்பு பணிகள் முழுமை அடையாவிட்டால் வாகைக்குளம் டோல்கேட்டில் கட்டர் அவசூல் நிறுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை 50 சதவீத கட்டண வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த பெர்டின் ராயன் ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு; தேசிய நெடுஞ்சாலை எண் 138 துறைமுக நகரமான தூத்துக்குடி நெல்லையுடன் இணைக்கிறது. இங்குள்ள நான்கு வழி சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் அதிக அளவிலான வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலையை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. தூத்துக்குடி விமான நிலையமும், வாகைக்குளத்தின் அருகில் அமைந்துள்ளது. வாகை குளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக புதுக்கோட்டை பகுதியில் டோல்கேட் அமைந்துள்ளது. அந்த இடத்திலிருந்து வாகை குளத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு வழக்கறிஞர் ஜோயல் முழு முயற்சி எடுத்து கோர்ட்டில் வாதாடி வாகை குளத்திற்கு இடம் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க முழு முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி, 28 கிலோமீட்டர் தொலைவில் நெல்லை அமைந்துள்ளது. இங்குள்ள நான்கு வழிச்சாலைக் காண பணிகள் கடந்த 2001 இல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 2012ல் திறக்கப்பட்டது. இதுவரை எந்தவித மறுசாலை அமைக்கும் பணியும் நடக்கவில்லை, 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் ஆங்காங்கே விரிசல்கள், பள்ளங்கள் உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் உள்ள சாலையால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பெரிய 2 பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் இரு பகுதிகளும் சேதம் அடைந்த நிலை உள்ளன. பாலத்தில் பல இடங்களில் ஓட்டைகள் உள்ளன. இதனால் ஒரு வழி பாதையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து சில இடங்களில் மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முழுமையாக சரி செய்யப்படவில்லை மேலும் 12 கோடி ரூபாய் செலவில் அந்தப் பாலத்தினுடைய சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆனால் அவை முழுமையான ஒரு பாலம் உருவாகுமா? என்கின்ற கேள்வி ஆனது மக்கள் மத்தியில் உள்ளது. அந்த சந்தேகத்தை டோல்கேட் நிர்வாகம் தான் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். வாகைகுளம் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். முறப்பநாட்டு பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 138 இல் முறையாக சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அது வரை கட்டண வசூலை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும் இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் பராமரிப்பு பணிகள் முறையாகவும் முழுமையாகவும் முடியும் வரை வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், முழுமையாக பராமரிப்பு பணிகளை முடிக்க விட்டால் டோல்கேட் கட்டண வசூலை முழுமையாக நிறுத்தி வைக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும் மனுவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய மண்டல அலுவலர், திட்ட இயக்குனர், டோல்கேட் ஒப்பந்த நிறுவனம் ஆகியோரின் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணைக்கு செப்டம்பர் 25க்கு தள்ளி வைத்தனர்.--------------தூத்துக்குடியில் இருந்து ஜெகஜீவன்