ஊழல் செய்த அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலினால் எப்படி தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும். தூத்தக்குடி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு
தூத்துக்குடி 2022 செப் 23; தூத்துக்குடியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது விழா பொதுக்கூட்டம் 22/09/2022 அன்று மாலை தூத்துக்குடி டூவிபுரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்திற்கு ஏதாவது புது திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தாரா என்றால் இல்லை. தற்போது பழி வாங்கும் நோக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரையிடு நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் மட்டும் ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு ஐந்து முறை ரையிடு நடைபெற்றுள்ளது. ரையிடில் கைப்பற்றப்பட்டத்தை காட்ட முடியுமா? அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதற்காகவே இந்த ரையிடு நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய அவர் இன்று திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கீதா ஜிவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. அதில் சிலர் அவ்வழக்கிற்காக தற்போது கூட நீதி மன்றத்தில் ஆஜர் ஆகி வருகின்றனர். இப்படி ஊழல் செய்த அமைச்சர்களை அருகில் வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலினால் எப்படி தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும் என்றும் அதிமுக மட்டும் தான் மக்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம் அதன் தலைவர் எடப்பாடியார் மற்ற எந்க கட்சிகளும் மக்களுக்காக போராடவில்லை என்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு, பகுதிச் செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், முருகன், ஜெய்கணேஷ் மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கில் மத்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், பத்மாவதி, ஜெயராணி, ஜெயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னாள் மாநகரட்சி கவுன்சிலர் சென்பகசெல்வன் வரவேற்றார், தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தீப்பொறிமுருகேசன், வைகைப்பாண்டி, நாஞ்சில் ஞானதாஸ், கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், டாக்டர் ராஜசேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், ஒன்றியச் செயலாளர் காசிராஜன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், நிர்வாகிகள் சந்தனம், வக்கீல் யு.எஸ்.சேகர், சேரினா பாக்கியராஜ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ், ஜே.ஜே.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண் ஜெபக்குமார், சுதர்சன்ராஜா, வக்கில் கோமதி மணிகண்டன், சத்தியா லெட்சுமணன், முன்னாள் சேர்மன் மனோஜ், வக்கில் முனியசாமி, சரவணபெருமாள், வலசை வெயிலுமுத்து, ஜோசுவா அன்பு பாலன், ஐடியல் பரமசிவன், முத்துக்கணி, மனுவேல்ராஜ், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், ஜெயராஜ், சிவன், ஜெ.ஜெ.குமார், திருச்சிற்றம்பலம், கே.டி.சி.ஆறுமுகம், லெட்சுமணன், எம்.பெருமாள், உதயகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, ஜெயபாரதிமனோகர், ஜெயக்குமார், மெஜிலா, முத்துமதி, சந்தனப்பட்டு, பெரியசாமி, பொன்ராஜ், சந்திராசெல்லப்பா, சந்திராபொன்ராஜ், ஆத்திக்கண், நிர்வாகிகள் பிரங்கிளின் ஜோஸ், டைகர் சிவா, மைதின், பி.ஜே.சி.சுரேஷ், அண்ணா தொழிற்சங்கம் ஜவஹர், அய்யாசாமி, ஆனந்தராஜ், மகாராஜன், ஹரிராமன், தொப்பைகனபதி, வட்ட செயலாளர்கள் ஜனார்தனன், சந்திரசேகர், ராமச்சந்திரன், பாக்கியராஜ், சொக்கலிங்கம், கொம்பையா, ராஜன் மணிவண்ணன், அருண்ஜெயக்குமார், நயினார், நியுகலாஸ், ரகுநாதன், உதயசூரியன், மில்லர்புர் ஆர்.எல்.ராஜா, அருண்ராஜா, மணிகண்டன், நௌசாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், முருகேசன், பூர்ணசந்திரன், செல்வராஜ், கண்ணையா, மாரிமுத்து, யோவான், உலகநாதபெருமாள், கமலஹாசன், மகளிர்கள் சண்முகதாய், இந்திரா, சாலினி, ராஜேஸ்வரி, ஸ்மைலா, பானுமதி, சரோஜா மற்றும் அலெக்ஸ்.ஜி, சங்கரநாரயணன், இளையராஜா, ராஜன், முத்துப்பாண்டி, நிலாசந்திரன், தீனாவசந்த், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, வெங்கடேஷ், ஆனந்த், சரவணவேல், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இருதியில் தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் நட்டார் முத்து நன்றி கூறினார். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 250 மகளிர்களுக்கு சேலை வழங்கி கொண்டாடப்பட்டது.