Onetamil News Logo

அடுத்த ஐந்தாண்டுகளில் எத்தனை தனியார் ரயில்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது?  திமுக எம்பி கனிமொழி கேள்வி

Onetamil News
 

அடுத்த ஐந்தாண்டுகளில் எத்தனை தனியார் ரயில்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது?  திமுக எம்பி கனிமொழி கேள்வி


டெல்லி 2020 செப் 23 ;அடுத்த ஐந்தாண்டுகளில்எத்தனை தனியார் ரயில்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது, ரயில்வே தனியார்மயப்படுத்தப்படுவதால், ரயில்வேயில் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் அரசிடம்உள்ளதா,  இந்த அரசுப்பணியாளர்களை தனியார் இயக்கும் ரயில்களில்பணியமர்த்தும் திட்டம் உள்ளதா என திமுக எம்பி கனிமொழிமக்களவையில் கேள்வி அனுப்பினார். 
மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயல்கனிமொழி கேள்விக்கு பின்வருமாறுபதிலளித்தார். 
தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் நவீனமான ரயில்களை தனியாரின் பங்களிப்போடு இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  1 ஜூலை 2020 அன்று, இத்திட்டத்தை செயல்படுத்த 12 தடங்களில் தனியார் நிறுவனங்களிடமிருந்துபயணிகள் ரயில்கள் இயக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன.  எந்தெந்த தடங்கள் என்ற விபரங்கள் ரயில்வே இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.  ஆனால் ரயில், ரயில்பாதை பாதுகாப்பு, உள்ளிட்டவை மத்திய அரசிடமே தொடர்ந்து இருக்கும். 
தனியார்மயமாக்குதல் காரணமாக ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. 
தனியார் பங்களிப்போடு புதிய ரயில்கள்இயக்குவதால், தற்போது உள்ள பயணிகள் ரயில் சேவைகள் எதுவும்பாதிப்புக்குஉள்ளாகாது. இதன் காரணமாக தற்போது பணியில் உள்ள ஊழியர்களின் பணி பாதிக்கப்படாது.  
மேலும், ரயில்வே ஊழியர்களின்நலனைகருத்தில் கொண்டு, தனியார் இயக்கும் ரயில்களுக்கானஊழியர்களை, (ரயில் ஓட்டுனர் மற்றும் காப்பாளர்)ரயில்வே துறையே வழங்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo