Onetamil News Logo

ரெடிமேடு துணிகள்11 பேரிடம்  வாங்கி ரூ.2 கோடி வரை மோசடி,கணவன் ,மனைவி கைது 

Onetamil News
 

ரெடிமேடு துணிகள்11 பேரிடம்  வாங்கி ரூ.2 கோடி வரை மோசடி,கணவன் ,மனைவி கைது 


சென்னை, 2021 ஜூலை 24 ;ரெடிமேடு துணிகள்11 பேரிடம் துணிகள் வாங்கி ரூ.2 கோடி வரை மோசடி,கணவன் , மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மொத்தமாக ரெடிமேடு துணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 41), அவரது மனைவி விஜயநிர்மலா (40) ஆகியோர் ரெடிமேடு கடைகள் நடத்தி வருவதாகவும், அவர்களது கடைகளுக்கு ரெடிமேடு துணிகள் சப்ளை செய்யும்படியும் கேட்டனர். அதன்படி ரூ.1½ கோடிக்கு ரெடிமேடு துணிகள் சப்ளை செய்தேன். ஆனால் அவர்கள் ரூ.83 லட்சத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டனர். இது போல் அவர்கள் 11 பேரிடம் துணிகள் வாங்கி ரூ.2 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனும், அவரது மனைவி விஜயநிர்மலாவும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo